32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 163)
தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி சினிமா

தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. ‘இந்தப் படத்தின் தலைப்பைத் தூக்குங்கள்’ எனக் கூறித் தயாரிப்பாளரும் இயக்குநருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள். இந்தப் பிரச்சனையைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்காகவும், சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வாராகி. “நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம். சம கால நிகழ்வுகளைக் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன். படம் ஓடக்கூடிய […]

26/07/2018 Dinesh R
ViU – செம ஃபீலு ப்ரோ! சினிமா

ViU – செம ஃபீலு ப்ரோ!

உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா […]

25/07/2018 Dinesh R
புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ் சினிமா

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்கத் தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்து வியந்து […]

24/07/2018 Dinesh R
சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு சினிமா

சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது. விழாவில் பேசிய நடிகர் பிரபு, “அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார்; இறக்குவார்; குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்தப் பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் […]

24/07/2018 Dinesh R
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம் அயல் சினிமா

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் […]

20/07/2018 Dinesh R
‘பூமி’க்கான இசை சமூகம்

‘பூமி’க்கான இசை

பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். […]

16/07/2018 Dinesh R
தமிழ்ப்படம் 2 விமர்சனம் சினிமா

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது. இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. […]

13/07/2018 Dinesh R
மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி சினிமா

மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் […]

10/07/2018 Dinesh R
வயலின் ‘ஞான’ சேகரன் 80 சமூகம்

வயலின் ‘ஞான’ சேகரன் 80

1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர். 70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் […]

10/07/2018 Dinesh R
காசு மேலே காசு விமர்சனம் சினிமா

காசு மேலே காசு விமர்சனம்

மிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயகியோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். பணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி […]

08/07/2018 Dinesh R
அசுரவதம் விமர்சனம் சினிமா

அசுரவதம் விமர்சனம்

தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார். அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம். முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் […]

08/07/2018 Dinesh R
அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம் சினிமா

அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

முதல்முறையாக இந்தியாவில் தயாராகியுள்ள இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம், ‘அனுமனும் மயில்ராவணனும்’ ஆகும். இராமாயண போரின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில், தரையில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்த ராமன், “நிராயுதபாணிகளைத் தாக்குவது தர்மம் ஆகாது. நீ இன்று போய் நாளை வா” என்கிறார். அன்றிரவு அவமானத்தில் பொறுமிக் கொண்டிருக்கும் ராவணனுக்கு, அவன் தலைகளில் ஒன்று, மாயாவி மயில்ராவணனைக் கொண்டு ராமனைக் கொல்வதற்கான யோசனையைச் சொல்கிறது. அதற்கேற்ப மாயாவியான மயில்ராவணன், விபீஷ்ணனின் பலமான […]

07/07/2018 Dinesh R
மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம் சினிமா

மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே நடித்துள்ளதால் விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள படம். படத்தின் முதற்பாதி முழுவதுமே நவரச நாயகனுக்காக என்று பிரத்தியேகமாக எடுத்துள்ளனர். ஆனால், கதையோடு இயைந்து அதைக் கொடுக்காமல், இந்தக் காட்சியில் கார்த்திக் நடக்கிறார், கார்த்திக் காமெடி பண்ணுகிறார், இந்தக் காட்சியில் அவரது பிரத்தியேகமான மேனரிசம் வெளிப்படுகிறது எனக் கதையோடு ஒட்டாத காட்சிகளாக வைத்துள்ளனர். “நவரச நாயகன் கார்த்திக்கே, கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்ற ரேஞ்சிற்கு உள்ளது திரைக்கதை. […]

07/07/2018 Dinesh R