32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 172)
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 சினிமா

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 1 மூவிபஃப், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான […]

21/01/2018 Dinesh R
ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள் மற்றவை

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

ஜீரோ டிகிரி என்பது சாரு நிவேதிதாவின் மிகப் புகழ் பெற்ற நூலாகும். அப்புத்தகத்தின் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் இணைந்து தொடங்கியுள்ளனர் திருமதி காயத்ரி ராமசுப்ரமணியமும் ராம்ஜி நரசிம்மனும். இப்பதிப்பகத்தின் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள கலையரங்கில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. அறிமுக விழாவில், சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டனர். இவ்விழாவில் […]

20/01/2018 Dinesh R
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் புத்தகம்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்கு உகந்த தரம் மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையைத் தரும் விஷயம். இக்குறையைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே “ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)” ஆகும். சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை […]

19/01/2018 Dinesh R
உதயநிதியை நிமிர வைக்கும் படம் சினிமா

உதயநிதியை நிமிர வைக்கும் படம்

மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். “ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் […]

18/01/2018 Dinesh R
அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம் சினிமா

அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு தேவாவின் பிரபு ஸ்டூடியோஸின் கூட்டுத் தயாரிப்பில், டி.இமான் இசையில், அருள்மூர்த்தி இயக்கும் அனிமேஷன் திரைப்படம் “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ”. மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) புனைவு அனிமேஷன் கதாபாத்திரம் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் தலைப்பும் கதையும் எம்.ஜி.ஆருடையதேயாகும். இது எம்.ஜி.ஆரின் கனவுப் படம் என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். பதிவிட்டிருந்தார். 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட […]

18/01/2018 Dinesh R
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது அரசியல்

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் […]

17/01/2018 Dinesh R
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் சினிமா

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, ‘சொடுக்கு’ பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி […]

13/01/2018 Dinesh R
ஸ்கெட்ச் விமர்சனம் சினிமா

ஸ்கெட்ச் விமர்சனம்

தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் […]

12/01/2018 Dinesh R
குலேபகாவலி விமர்சனம் சினிமா

குலேபகாவலி விமர்சனம்

முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் […]

12/01/2018 Dinesh R
நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி. சினிமா

நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘7C’s என்டர்டெயின்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் […]

10/01/2018 Dinesh R
மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில் சினிமா

மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்

“கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” எனும் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும், ‘மஸ்காரா’ அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]

10/01/2018 Dinesh R
குலேபகாவலி – பொங்கல் விருந்து சினிமா

குலேபகாவலி – பொங்கல் விருந்து

KJR ஸ்டுடியோஸ் சார்பாகக் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி”. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகி பாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு […]

09/01/2018 Dinesh R