32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 171)
ஃபேன்டம் த்ரெட் விமர்சனம் அயல் சினிமா

ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்

உக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு ‘ஃபேன்டம் த்ரெட்’ எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது. ரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். […]

04/02/2018 Dinesh R
விசிறி விமர்சனம் சினிமா

விசிறி விமர்சனம்

அஜித் குமார் ரசிகரும், விஜய் ரசிகரும் ஃபேஸ்புக்கில் ஜென்ம விரோதியாக உள்ளனர். விதி, அஜித் குமார் ரசிகரை ஜென்ம விரோதியான விஜய் ரசிகரின் தங்கையைக் காதலிக்க வைக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தலைப்பிற்கு முன் கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடும்பொழுது, விஜய் மற்றும் அஜீத்தின் படங்களில் இருந்து ‘மாஸ் சீன்’களை அழகாகத் தொகுத்துள்ளனர். அந்த விறுவிறுப்பு, படத்தின் முதல் பாதியில் முழுவதும் மிஸ்ஸிங். ஒன்றே முக்கால் மணி நேரம் படம் தான் என்ற போதும், இடைவேளைக்கு […]

03/02/2018 Dinesh R
மதுரவீரன் விமர்சனம் சினிமா

மதுரவீரன் விமர்சனம்

தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். ‘பூ’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் […]

03/02/2018 Dinesh R
ஏமாலி விமர்சனம் சினிமா

ஏமாலி விமர்சனம்

மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை – கற்பனை என இரண்டு […]

03/02/2018 Dinesh R
படைவீரன் விமர்சனம் சினிமா

படைவீரன் விமர்சனம்

ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். ‘சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்’ என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் […]

03/02/2018 Dinesh R
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம் சினிமா

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  […]

02/02/2018 Dinesh R
மரப்பாச்சி பொம்மையின் சாகசம் புத்தகம்

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்‘ போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் […]

01/02/2018 Dinesh R
பேட்டை – தமிழ்ப்பிரபா புத்தகம்

பேட்டை – தமிழ்ப்பிரபா

சென்னை பற்றி மற்றவர்கள் பார்வை என்பதே எள்ளலும் கிண்டலுமாக தான் இருக்கும். இது வாழ்வதற்குத் தகுதியான இடமில்லை, ஊரு முழுக்க நாற்றமெடுக்கும் கூவத்துக்கு நடுவில் குடியிருக்க முடியாது, சுற்றுபுறம் மிகவும் கெட்டுவிட்டது, சென்னையைச் சுற்றி வாழும் சேரி மக்கள் பேசும் பாஷை சகித்துக் கொள்ள முடியாது என இன்னும் பல இத்யாதிகள். இப்படித் தூற்றி கொண்டே பல இடங்களில் இருந்து சென்னையில் பகுசாகக் குடியேறியவர்களின் பல கேலி கிண்டலுக்கு மத்தியில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டு, முன்னர் சேரியாகவும் […]

01/02/2018 Dinesh R
பாகமதி விமர்சனம் சினிமா

பாகமதி விமர்சனம்

அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை. படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர். மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி […]

28/01/2018 Dinesh R
நிமிர் விமர்சனம் சினிமா

நிமிர் விமர்சனம்

எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல், அமைதியாய்த் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவனுக்கு எதிர்பாராமல் விழும் அடியை விடப் பெருத்த அவமானம் வேறேதும் இல்லை. அப்படியான அவமானத்துக்குக் காரணமாக இருக்கக் கூடிய மூலத்தை வேரறுத்தாலொழிய நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் அவனுக்குச் சொந்தமாகாது. நேர்ந்த அவமானத்துக்கு நிகராத்க தேர்ந்த பதிலடி கொடுத்து நிமிரும் செல்வனின் கதை ‘நிமிர்’. தென்காசி வட்டாரத்தில் (தமிழ் சினிமாவையே ‘வட்டார சினிமா’ என்று சொல்லும் கமல்ஹாசனின் மொழி அல்ல இது), ஆத்மார்த்தமான ஒளிப்படக்கூடக் […]

26/01/2018 Dinesh R
பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்! சினிமா

பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்!

பல தடைகளைக் கண்டு எதிர்ப்புகளைச் சம்பாதித்துத் தனக்காகக் காத்திருந்த திரையை அடைந்திருக்கிறாள் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே (பத்மாவதி), ரன்வீர் சிங் (சுல்தான் அலாவுதீன் கில்ஜி), ஷாகித் கபூர் (ராவல் ரத்தன் சிங்) மற்றும் பலர் நடித்துள்ள இந்தி மற்றும் தமிழின் மொழிமாற்று வடிவமான ‘பத்மாவதி’ ‘பத்மாவத்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. ‘பத்மாவத்’ என்று பெயர் மாற்றினால் சிக்கல்கள் சரியாகிவிடுமா என்பதை விமர்சிக்கும் வகையில் கோலிவுட் நடிகர் சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் […]

25/01/2018 Dinesh R
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி சினிமா

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் […]

23/01/2018 Dinesh R
மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் சினிமா

மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

“தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் […]

22/01/2018 Dinesh R