OthersDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Others
ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்
ஜாக்கி சான் நடிப்பில் உருவான “ப்ளீடிங் ஸ்டீல்” ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படம். இயந்திர இதயத்தோடு வாழும் ஒரு முன்னாள் கடற்படை வீரனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தக் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்டு ஒரு கும்பலும், ஜாக்கி சானும் அவரைத் தேடி வருகின்றனர். அந்த எழுத்தாளர் இறந்து விட, இயந்திர இதயம் கொண்டவனின் கும்பலிடம் இருந்து ஜாக்கி சான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஏஜென்ட் லின் […]

ஜி.எம் மாடுலர் ஸ்விட்சுகள் – தரமும் தொழில்நுட்பமும்
பல ஆண்டுகளாகவே ஸ்விட்சுகள் (Switches) மற்றும் அவை தொடர்பான வீட்டு உபகரணங்களைத் தயாரித்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் – GM Modular! தர மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் நிறுவனமிது! இந்நிறுவனத்தில் பிரதான தூதராக இணைகிறார் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. JITO CONNECT 2018 நிகழ்வின் போது பொலிவுடன் கூடிய புதியதொரு பொருள் அட்டவணையை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்! புதிய பரிமாணங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கில் அந்நிறுவனத்தின் புதியதான அறிமுகப் பொருட்கள் […]

கேணி விமர்சனம்
எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை. தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் […]

6 அத்தியாயம் விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து ‘6 அத்தியாயம்’ என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ […]

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்
தலையில் எண்ணெய் வைக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து யமதர்மராஜன் ஒரு மரண விளையாட்டை விளையாடுகிறார். நான்கு டாஸ்க்-களை நாயகன் முடிக்காவிட்டால் அவன் மரணித்துவிடுவான். அந்த நான்கு டாஸ்க்-கள் என்ன, அவற்றில் நாயகன் வென்றானா இல்லையா என்பதே படத்தின் கதை. நாயகனாக அஸார் அறிமுகமாகியுள்ளார். புதுமுகம் என்றாலும், அடுத்த வீட்டுப் பையனைப் போன்ற பரீச்சயத்தைத் தோற்றுவித்துவிடுகிறார். வேலையில்லாததால் அவர் வீட்டினரால் கலாய்க்கப்படும் பொழுதும், ஆங்கிலம் தெரியாமல் இன்டர்வியூவில் சொதப்பும் பொழுதும், யமதர்மராஜாவால் சொதப்பப்படும் பொழுதும் […]

மெர்லின் விமர்சனம்
இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, ‘மெர்லின்’ எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாய் […]

கூட்டாளி விமர்சனம்
ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் […]

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது. திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை. ‘கடவுளைக் காணும் வழி யாது?’ என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. ‘ஓம்’ என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி […]

6 அத்தியாயம் எப்படியிருக்கு?
இயக்குநர் பாரதிராஜா: தெளிவான சிந்தனை. சரியான திட்டமிடல், புதிய வகை கதை சொல்லல் என தமிழ்சினிமாவைப் புது தளத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த 6 அத்தியாயம். இயக்குநர் ஏ.வெங்கடேஷ்: ரொம்பவே வித்தியாசமான முயற்சி. 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன. நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அறிவழகன்: இந்தப் படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி! இயக்குநர் ரவிகுமார்: இந்த ஒரே படத்தின் மூலம் […]

கஜினிகாந்த் – ஸ்டில்ஸ்
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

கலகலப்பு – 2 விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள் இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பிரதான ஜோடிகளான […]

சவரக்கத்தி விமர்சனம்
முழு நீள பிளாக்-காமெடி படமாகச் சிரிக்க வைக்கிறது சவரக்கத்தி. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மிஷ்கினின் தம்பி G.R.ஆதித்யா. முடி திருத்துபவரான பிச்சை தனது குடும்பத்துடன் ராஜ்தூதில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களைப் பரோலில் வந்த மங்கா எனும் கொலையாளியின் கருப்பு ஸ்கார்பியோ லேசாய்த் தட்டி விடுகிறது. பிச்சை தனது குடும்பத்தினர் முன் பந்தாவாக ஸ்கார்பியோவில் வந்தவர்களை வம்புக்கு இழுத்து விடுகிறார். கிறுக்கனான மங்கா, பிச்சையைக் கொன்றே தீர்வதென அவரைத் தேடுகிறார். பிச்சை மங்காவிடம் சிக்கினாரா இல்லையா […]

“நானொரு குத்துச்சண்டை வீராங்கனை” – நிகிஷா
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ஆம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷன் ரோலில் அதிரடியாகக் களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் […]

ஹே ஜூட் விமர்சனம்
நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹே ஜூட்’ என்பது 1968இல் வெளிவந்த ‘தி பீட்டில்ஸ்’ குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை ‘தி பீட்டில்ஸ் கேஃபே’ என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர். ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. […]
