TrailerDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Trailer
வீரையன் விமர்சனம்
வீரையன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவர். சிறு தெய்வங்கள், குறிப்பாகத் தமிழகத்தின் காவல் தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாக வாழ்ந்து தனது தியாகத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பகுதி மக்களின் அன்பையும் மரியாதையுக் சம்பாதித்திருப்பார்கள். அப்படி, தொழில்நுட்பத் தொடர்பு சாதனங்கள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்திராத1989 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் வாழ்ந்த மிகச் சாதாரண மனிதன் எப்படித் தன் தியாகத்தால் வீரையன் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று கதைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து […]

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார். உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர். அதில் […]

தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா
தேசிய விருது பெற்ற ஜோக்கர் இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான அவரது அண்ணன் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். ‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னுமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது, ரங்கா எப்படி இந்தப் படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தைச் சுவாரஷ்யமாகச் சொன்னார். […]

மன நலத்தில் யோகாவின் பங்கு
நியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர். ‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன […]

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்
சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை. […]

டிக்: டிக்: டிக் – போஸ்டர்

‘அறம்’ ராமசந்திரன்
வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்தப் படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களைத் தாண்டிக் கதைக்குத் தூண்களாக விளங்கும் மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘அறம்’ திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் […]

சென்சார் போர்டின் மர்மமென்ன?
இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ், “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” எனும் படம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா இப்படத்தைத் தயாரித்துள்ளனர். “இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளைச் […]

அறம் விமர்சனம்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக […]

வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை
நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி. கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் […]

இப்படை வெல்லும் விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, ‘சோட்டா ராஜ்’ எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, […]

‘ஆறடி ஆண்டவன்’ பாடல் வரிகளுடன்

நந்தினி – ஆல்பம்
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] நந்தினி, கிரகணம் படத்தின் நாயகி ஆவார்.
