32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 24)
அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சமூகம்

அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காகத் தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் […]

29/07/2025 Dinesh R
Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக் Songs

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். […]

28/07/2025 Dinesh R
தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review இது புதிது

தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

ஆகாச வீரன் எனும் பரோட்டா மாஸ்டர், தன் மனைவி பேரரசிக்கும், அம்மாவான பொட்டுக்கும் இடையில் சிக்கிப் படாதபாடுபடுகிறான். அவனது பாடு, அல்லது எந்தவொரு கணவனின் பாடும், ஒரு முடிவே இல்லாத பயணம் என்பதைப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. படம் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றது. அவ்வளவு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் படத்தில் ஒரு தனித்த அடையாளமும், திரைக்கதையில் ஒரு சின்ன பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ்க்கு, மனிதர்களைக் கூட்டி, அவர்கள் மூலமாக […]

26/07/2025 Dinesh R
மகா அவதார் நரசிம்மா விமர்சனம் | Mahavatar Narasimha review அயல் சினிமா

மகா அவதார் நரசிம்மா விமர்சனம் | Mahavatar Narasimha review

அழகான பிரகலாதன். அவரை மிக அழகாக வடிவமைத்து, பார்வையாளர்களைக் கொள்ளை கொள்ளுமளவு சிறப்பாக அனிமேட் செய்துள்ளனர். தமிழ் டப்பிங்கையும் மெனக்கெட்டு நேர்த்தியாகச் செய்துள்ளனர். பிரகலாதனது உறுதியான பக்தியும், கருணை பொழியும் வதனமும் காண்போரைக் வசீகரித்து விடுகிறது. விஷ்ணுவின் அவதாரம் பின்தங்கி, பக்த பிரகலாதன் வானளவு உயர்ந்து நிற்கிறார். ‘அடியாரைப் போற்றுதல்’ என்பதே வைணவத்தின் முக்கியமான அம்சம். அதைப் படம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. காஷ்யபரும் திதியும் கூடும் நேரத்தில் இருந்து படம் தொடங்குகிறது. ஹிந்துத் தொன்மத்தின் தொடக்கமே, […]

26/07/2025 Dinesh R
ஹரிஹர வீரமல்லு விமர்சனம் | Hari Hara Veera Mallu review அயல் சினிமா

ஹரிஹர வீரமல்லு விமர்சனம் | Hari Hara Veera Mallu review

முதல் பாகமான இப்படத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர். வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்துத் தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமையுடைய (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார். ஹரிஹர வீரமல்லு சனாதனத்தை ஒழுகி (நெறிப்படி நடக்கும்) வாழும் ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற புனைவே இப்படம். இந்தப் […]

25/07/2025 Dinesh R
சரண்டர் – ஈரம் அறிவழகனின் உதவியாளர் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர் சினிமா

சரண்டர் – ஈரம் அறிவழகனின் உதவியாளர் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர்

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’ ஆகும். இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய மன்சூர் அலிகான், “இயக்குநர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். […]

25/07/2025 Dinesh R
மாரீசன் விமர்சனம் | Maareesan review இது புதிது

மாரீசன் விமர்சனம் | Maareesan review

மாரீசன் என்பது ராமாயணத்தில் வரும் பொன்னிற மாயமானைக் குறிக்கிறது. எப்படி மாரீசன் ராமனை ஏமாற்றித் தன் மாயத்தில் விழ வைக்கிறாரோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை ஏமாற்றி அவரது பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் சிறையிலிருந்து விடுதலையாகும் தயாளன். மாரீசனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. படத்தின் நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் […]

24/07/2025 Dinesh R
சட்டமும் நீதியும் – 3 நாட்களில் 51 மில்லியன் நிமிடங்கள் OTT

சட்டமும் நீதியும் – 3 நாட்களில் 51 மில்லியன் நிமிடங்கள்

ஜீ5 வெளியீடாக ஜூலை 18, 2025 இல் வெளியான சட்டமும் நீதியும் தொடரில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தொடர் மூலம் நாயகனாகத் திரும்பியிருக்கிறார் சரவணன். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ், இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது. […]

22/07/2025 Dinesh R
PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம் சினிமா

PRK Productions – புதிய தயாரிப்பு நிறுவனம்

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ்த் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு. […]

21/07/2025 Dinesh R
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 – இசையுத்தம் Teaser

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 – இசையுத்தம்

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர ட்விஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாகத் திரைத்துறையில் கோலோச்சி வருகின்றனர். […]

21/07/2025 Dinesh R
ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi அயல் சினிமா

ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி (Peddi)’ படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெடி (Peddi)’ திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் […]

21/07/2025 Dinesh R
காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara Teaser

காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara

‘ராஜ குமாரா’ , ‘கே.ஜி.எஃப்.’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்குப் பின்னால் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா: சேப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌ இது மூன்று வருட படக்குழுவின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. படத்தின் பின்னணியில் உள்ள காவியத்தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை இந்த வீடியோ வழங்குகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட […]

21/07/2025 Dinesh R
Chennai Files: முதல் பக்கம் – சோஷியல் மெஸேஜ் த்ரில்லர் சினிமா

Chennai Files: முதல் பக்கம் – சோஷியல் மெஸேஜ் த்ரில்லர்

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், ”ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என […]

21/07/2025 Dinesh R
முனைவர் பட்டம் பெற்ற Pad Man பத்மஸ்ரீ அருணாசலம் முருகனந்தம் சமூகம்

முனைவர் பட்டம் பெற்ற Pad Man பத்மஸ்ரீ அருணாசலம் முருகனந்தம்

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் ஈடுபட்ட அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட் மேன் (Pad Man)” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். […]

20/07/2025 Dinesh R
சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review OTT

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

தனது மகள் வெண்ணிலாவைக் கடத்தி விட்டார்கள் என்று காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செல்கிறார் குப்புசாமி. காவல்துறை அவரது புகாரைப் பதியாமல் துரத்தி விட, இயலாமையின் உச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனக்குத் தீயிட்டு மாய்த்துக் கொள்கிறார் குப்புசாமி. நீதிமன்றத்துக்குள் சென்று வாதிடாத, வீட்டினரால் மதிக்கப்படாத வக்கீலான சுந்தரமூர்த்தி, பொதுநலவழக்காகக் குப்புசாமியின் வழக்கைப் போடுகிறார். குப்புசாமி யார், வெண்ணிலாக்கு என்னானது என்ற கேள்விகளுக்குப் பதில் தேடியவண்ணம் பயணிக்கிறது சட்டமும் நீதியும் தொடர். சுந்தரமூர்த்தியின் உதவியாளர் அருணாவாக நடித்துள்ளார் நம்ரிதா. சுந்தரமூர்த்தியிடம் பரிந்துரைக் […]

20/07/2025 Dinesh R