32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 26)
மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review இது புதிது

மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளனான வாசன், அவனது காதாபாத்திரங்கள் உலவும் உலகில் சிக்கிக் கொள்கிறான். தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் எனக் கோபத்தில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளன் எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு. எழுத்தாளனுக்குள் நடக்கும் விசாரமாக இந்தக் கதை நகர்கிறது. ‘சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்வதுதான் இந்தப் படத்தின் பின்னுள்ள ஐடியா’ என்றார் படத்தின் இயக்குநர் […]

09/07/2025 Dinesh R
ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review இது புதிது

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி […]

09/07/2025 Dinesh R
“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage சினிமா

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், லவ் மேரேஜ் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் சண்முக பிரியன், ”இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும் […]

04/07/2025 Dinesh R
பறந்து போ விமர்சனம் | Paranthu Po review இது புதிது

பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் […]

04/07/2025 Dinesh R
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review இது புதிது

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் […]

03/07/2025 Dinesh R
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review இது புதிது

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு […]

02/07/2025 Dinesh R
“கயிலன்: சங்க காலச் சொல்” – இயக்குநர் அருள் அஜித் சினிமா

“கயிலன்: சங்க காலச் சொல்” – இயக்குநர் அருள் அஜித்

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் […]

30/06/2025 Dinesh R
“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன் சினிமா

“ரசிகர்களை அறிவாளியாளியாக நினைத்துப் படமெடுத்தால் வெற்றி பெறலாம்” – இயக்குநர் கெளரவ் நாராயணன்

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் B.T. அரசகுமார், ”அண்ணன் கே. ராஜன் வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன, க்ரைம் ஸ்டோரியா, […]

30/06/2025 Dinesh R
KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ சினிமா

KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்தத் திரைப்படம், எளிமையையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாகத் தயாரித்துள்ளார் ஜெய்கிரண். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தயாரிப்பாளர் ஜெய்கிரண், “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மட்டுமல்ல, எனக்கு மிக […]

30/06/2025 Dinesh R
DRAGON – நூறாவது நாள் வெற்றி விழா | AGS Entertainment சினிமா

DRAGON – நூறாவது நாள் வெற்றி விழா | AGS Entertainment

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி […]

29/06/2025 Dinesh R
Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான் சினிமா

Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான்

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேகா, “மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி.எஸ் அவர்கள் பிரமாதமாக இந்தப் படத்திற்கு […]

28/06/2025 Dinesh R
Sci-Fi க்ரைம் த்ரில்லரில் கெளதம் கார்த்திக் | Verus Productions சினிமா

Sci-Fi க்ரைம் த்ரில்லரில் கெளதம் கார்த்திக் | Verus Productions

கெளதம் ராம் கார்த்திக், வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப். எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவராவார். இந்தப் பெயரிடப்படாத் திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் கெளதம் […]

28/06/2025 Dinesh R
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம் அயல் சினிமா

MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு “மைசா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்‌ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். இப்படத்தின் […]

28/06/2025 Dinesh R
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review அயல் சினிமா

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் […]

28/06/2025 Dinesh R
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review இது புதிது

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா […]

28/06/2025 Dinesh R