32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 25)
அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் சினிமா

அக்யூஸ்ட் – இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர்

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் ஷ்யாம், “இந்தத் திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதற்காக சில உத்திகளைக் கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும்” என்றார். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், […]

19/07/2025 Dinesh R
ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review இது புதிது

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள். கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் […]

19/07/2025 Dinesh R
Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல் Songs

Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசைக்கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரையிசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டண்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டண்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த […]

19/07/2025 Dinesh R
பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review இது புதிது

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம். ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார […]

18/07/2025 Dinesh R
காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக் Teaser

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் […]

18/07/2025 Dinesh R
Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் சினிமா

Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கரும், ஃப்ராங்க்ஸ்டர் ராகுலும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா […]

18/07/2025 Dinesh R
ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour சமூகம்

ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தயாரித்து, உருவாக்கி நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் […]

18/07/2025 Dinesh R
ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம் அயல் சினிமா

ரெஜினா கசாண்ட்ரா இன் The Wives திரைப்படம்

Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசாண்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறார். இப்புதிய திரைப்படம் “தி வைவ்ஸ்” எனும் தலைப்பில் உருவாகிறது. உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் திரையில் கொண்டு வரும் ரெஜினா, இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது […]

17/07/2025 Dinesh R
கெவி விமர்சனம் | Gevi review இது புதிது

கெவி விமர்சனம் | Gevi review

கெவி என்றால் ஆழமான பள்ளத்தாக்கு எனப் பொருள். கொடைக்கானலுக்குக் கீழுள்ள ஒரு மலைப்பகுதியில், பாண்டிய தேசத்தைச் சேர்ந்த மக்கள் குடி புகுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில், குளிர் பிரேதசங்களைத் தேடும் முயற்சியில், கெவி மக்களின் உதவியோடு கொடைக்கானலைக் கண்டடைகின்றனர் வெள்ளையர்கள். அவர்களின் வரவிற்குப் பிறகு, வெள்ளகெவி என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. சாலை வசதியற்ற கெவியில் வாழும் மக்கள் மிகவும் துயருகின்றனர். ஓரிரவு, கொடி சுற்றிக் கொள்வதால் கர்ப்பிணியான மந்தாரை மிகவும் அவதியுறுகிறார். ஊரே ஒன்று கூடி, மந்தாரையை டோலியில் […]

17/07/2025 Dinesh R
கவின் – பிரியங்கா மோகன் | Think Studios சினிமா

கவின் – பிரியங்கா மோகன் | Think Studios

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின், பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்தத் திரைப்படத்தை, திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய […]

16/07/2025 Dinesh R
“விவாகரத்து அவசியமா?” – இயக்குநர் பாண்டிராஜ் | தலைவன் தலைவி சினிமா

“விவாகரத்து அவசியமா?” – இயக்குநர் பாண்டிராஜ் | தலைவன் தலைவி

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாண்டிராஜ், “’தலைவன் தலைவி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் […]

15/07/2025 Dinesh R
தலைவன் தலைவி: Full package family entertainer | விஜய் சேதுபதி சினிமா

தலைவன் தலைவி: Full package family entertainer | விஜய் சேதுபதி

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, “எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு […]

15/07/2025 Dinesh R
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும் Trailer

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, ‘ஃபைவ் ஸ்டார்’ […]

14/07/2025 Dinesh R
மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review இது புதிது

மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் – மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது. தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், […]

12/07/2025 Dinesh R
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review சினிமா

ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

‘தேன் நிலவு (1961)’ எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர். இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் […]

11/07/2025 Dinesh R