Shadow

Author: Dinesh R

வெள்ளை மனசு

வெள்ளை மனசு

கதை, படைப்புகள்
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் .. வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை.. வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் அருகில் சென்றான், "எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3 மாசம் " என்றான்... இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் .. உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்.. எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார், "உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்".. அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தா...
இது வேற மாதிரி

இது வேற மாதிரி

கதை, படைப்புகள்
எல்லோர் கண்களும் அவர்கள் மேலயே இருந்தது. ஒன்றாய் வந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நானும் அவர்கள் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஒட்டி உரசாமல் காற்று நுழையும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் தலையில் துப்பட்டா சுற்றப்பட வில்லை. இடைவெளியில் மட்டும் இரண்டு வார்த்தைகள் மற்றும் ஒரு புன்னகையினை பகிர்ந்துக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாதி கூட புரிந்து விடும் போலிருந்தது. இவர்கள் கதை தான் புரியவில்லை. திரையரங்கு கலாச்சாரம் தெரியாத அப்பாவி கிளிகள் போல.இவர்கள் எப்பவும் இப்படி தான். எனது கல்லூரி கடைசி ஆண்டின் பொழுது இவர்கள் பள்ளியின் பால் வாசம் மாறாமல் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்த சில நாட்களிலியே இவர்கள் ஐந்து வருட காதல் கல்லூரி முழுவதிற்கும் தெரிந்த ஒரு விஷயமாக...
கள்ளநோட்டு

கள்ளநோட்டு

கவிதை, படைப்புகள்
சூரியன் வரும் முன்பே சுருக்காகப் புறப்பட்டு அவிழ்த்துப்போட்ட அனைத்தையும் அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டே பொத்தானை மாற்றி மாற்றிப் பூட்டினான் மேலுக்குக் கீழ்.. கீழுக்குக் கீழென..அடுத்து வேறொரு அறையில் மீண்டும் மற்றொன்றுடன் படுக்கையில் நான், விடுதியில் நுழைந்த காவல்காரர் கைதுசெய்தார் என்னைமட்டும் அன்று என்னுடன் இருந்ததை மறந்து, விட்டுவிடுகிறேன் "எனக்கு வேண்டியதை கொடு"வென சரியாகக் கேட்டார். சலித்துக்கொண்டே நேற்றிரவு வந்ததை இன்றிரவு பிடித்துவிடலாமென கொடுத்தால்.. " இந்த வேலை என்றிலிருந்தென?" ஏதுமறியாத என்னை அறைந்தார். எந்த வேலையென எனக்கென்னத் தெரியும்? தெரிந்தாலும், சிறை மீட்க ராமனேது?இன்றிரவும் வழக்கம்போல் கோரைப் பாயாவேன் என் மீது புரண்டுபடுக்க காக்கிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது நான் நீயென நாயென.கள்ளம் எங்கே இங்கு நான் கொடுத்த பணத...
என்ன மரியாதை! என்ன மரியாதை?

என்ன மரியாதை! என்ன மரியாதை?

கதை, படைப்புகள்
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.. உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்.இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு.. பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேலை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான். தெலுங்கான பிரச்சன...
ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

கதை, படைப்புகள்
இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.   வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.   பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வண்ணம் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.   இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.   அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.   மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.   அதை கண்டவர், ஒரே வாரத்த...
சூ.. தேசி

சூ.. தேசி

கவிதை, படைப்புகள்
ஒலிவாங்கியில் உரக்கப் பேசினார் கூட்டத்தை நோக்கி அந்நியப் பொருட்களை நாம் வெறுப்போம் நம் நாட்டுப் பொருட்களை மதிப்போம் முடித்தவுடன் குளிர்பானம் அருந்தினார் "கூலிங் கம்மியாயிருக்கு பெப்சி குடுங்க எனக் கேட்டார் கொக்க கோலாவைக் கொடுத்தபடி"- சே.ராஜப்ரியன்
காவ்ய நட்பு

காவ்ய நட்பு

கதை, படைப்புகள்
குப்பன் சுப்பனெல்லாம் தங்களை உயிர் நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தத் துரித யுகத்தில் பெற்றவர்களையே மறந்து விடுகின்றனர். ஆனால் சில விதி மீறல்கள் எங்கும் அனைத்து காலத்திலும் இருக்க தான் செய்யும். அப்படி ஒரு அதிசயம் தான் காவிய வித்தகர்களான காந்தப்பன்னும், சாந்தப்பன்னும். அவர்களது முதல் சந்திப்பு காற்றில் ஜவ்வுத்தாள் பை பறப்பது போல ஒரு சாதாரன சந்திப்பு தான். ஆனால் மெல்ல அது வரலாறாய் மாறி வருகிறது. அவர்களின் முழு வரலாறை திரட்ட முடியாத அபாக்கியசாலியாக இருக்கின்றேன். இக்காவியத்தின் நாயகர்கள் விளை மண்ணில் இருந்து பிடுங்கிய மரவல்லி கிழங்கு போல் இன்னும் தரணி தனில் வலம் வருவதால், இக்காவியத்தின் ஆரம்ப அத்தியாயங்களை மட்டுமே அளிக்க முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு வளர வளர காவியமும் வளரும் என நம்புவோமாக!காந்தா சாந்தா. இது தான் அவர்களின் சுருக்கம். உலகம் வெப...
ஓர் அழகியின் வரவு

ஓர் அழகியின் வரவு

கவிதை, படைப்புகள்
தன்வீட்டு மாடு பெண்கன்று ஈன்றதுக்கு புல்லரித்துப் போனான் மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு பொங்கல் வைத்துப் படைத்தான் தன் குலச் சாமிக்கு அவன் மனைவி பெற்ற பெண் குழந்தையை சனியனே என ஏசினான் தரித்திரம் பிடித்தவள் இந்தமுறையும் செலவைப் பெற்றெடுத்தாளென அவளுடைய புண் என்றாறும் மனத்திலும் கத்திக் கிழித்த இடத்திலும்?- சே.ராஜப்ரியன்...
பயர்த்தனை

பயர்த்தனை

கவிதை, படைப்புகள்
குடையுமாம் காக்கி காவாக்கள் - அதனையும் குமையச் செய்யும் மாநரகப் பேரோட்டிகள் பால் ஊத்தும் தண்ணீர் லாரிகள் கிறீச்சிட்டு வழுக்கும் வழுக்கை பணக்கார்கள் மிதிவண்டி பிளவில் சர்க்கஸ் புரியும் பிள்ளைபொதி சுமக்கும் மூனுசக்கர ஆனைகள் விர்ரூமென சீறும் ரெண்டுகால் சாத்தான்கள் நாற்சந்தி கருஞ்சாலை கொண்டவெண் பட்டைமீது நேற்று கடந்தவனின் கறை படிந்த சொச்சங்களின் மீதேறிய சக்கர தடங்களென பச்சொளி கண்டும் ஓசோனைத் துளையிடும் புகைசூழ் வாகண அணிவகுப்பை நோக்குங்கால் நமனை நினையாமல் நடுக்க மின்றி கடக்கும் நாளும் எந்நாளோ?(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு'' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)- தினேஷ் ராம்...
மாமனிதர்

மாமனிதர்

கவிதை, படைப்புகள்
நாதியற்று நின்றுகொண்டிருக்கும் அவரை யாரும் கண்டுகொள்ளவதில்லை வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பிறந்தநாள், நினைவுநாள் தவிர தினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம் எச்சங்களாய் இறந்தபிறகும் எங்களை சுமந்துகொண்டு உலகத்தை உயரமான இடத்திலிருந்து பார்த்து புரிந்துகொள்ள சொன்னார் காய்ந்துபோய் அவர்கழுத்தில் கிடக்கும் பூமாலை மூலம்- சே.ராஜப்ரியன்...
இந்தநாள் நல்லநாள்

இந்தநாள் நல்லநாள்

கவிதை, படைப்புகள்
குறுக்கே போனது பூனை எதிரே வந்தால் விதவை புறப்பட்டது ராகுகாலம் எமகண்டம் வருவதற்குள் சீக்கிரம் போய்சேரவேண்டும் கீழ்நோக்கு நாள் போகின்ற காரியம் இன்று உருபட்டமாதிரிதான்மாலை திரும்பிவந்தார் சாலையில் அந்த பூனை விபத்தில் நசுங்கிக் கிடந்தது விதவை அவள் வீட்டினெதிரே அழுதுகொண்டிருந்தாள் திருடப்பட்ட தன் சேமிப்பினையெண்ணியார் ராசிகெட்டவர்! யார் தரித்திரம் பிடித்தவர்?- சே.ராஜப்ரியன்...
இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

கவிதை, படைப்புகள்
தலைவனின் சின்ன வீட்டிற்கு பிறந்த பெரிய பையனின் பிறந்தநாள் ஊரெல்லாம் கொடி, பட்டாசு, தோரணம் தொண்டர்களின் காசில்அவன் வீட்டின் அடுப்பில் பூனை தூங்குகிறது தலைவர் வரும்பொழுது எதுவும் குறுக்கே வரக்கூடாது அதனால் இந்த பூனைப்படைசுவரொட்டிதனில் அவனைப்பார்த்து சிரிக்கிறார் விரைவில் உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என பணத்தை வாங்கும்பொழுது சிரித்த அதேதங்கப்பல்லுடன்மேலே கையை தூக்கி காட்டும்பொழுதெல்லாம் நானிருக்கிறேன், உதவிசெய்கிறேன் உங்களுடன் நான் என பேசுவார் இப்பொழுதுதான் புரிகிறது எப்பொழுதுமே எனக்கு கீழேதான் நீங்கள் உங்களுக்கு மேலேதான் நானென்பதை அப்படிச்சொன்னாரெனஇன்னும் சில கொண்டாட்டங்கள் இன்றிரவாம் கூட்டத்தில் மிதிபட்டுக்கொண்டே வாங்கவிருக்கும் அந்த உணவுப்பொட்டலத்திற்காக காத்துக்கொண்டிருகிறான் இன்னுமவன் ...ஒருவனின் பிறந்தநாள் எத்தனை உயிர்களின் இற...
யாசகம்

யாசகம்

கவிதை, படைப்புகள்
பயணசீட்டு வாங்குவதற்கு மட்டுமிருக்கிறது என்னிடத்தில் கூட்டத்திடம் கையேந்திக் கும்பிடு வருபவருக்கு எப்படித் தெரியும் என்நிலைமைசில்லறை போட்டவரெல்லாம் என்னை இப்படிப் பார்ப்பது என்ன நியாயம்?- சே.ராஜப்ரியன்
இன்னுமின்னும்

இன்னுமின்னும்

கவிதை, படைப்புகள்
மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்நாட்டின் எல்லையில் நடந்த துப்பாக்கிசூடுதலைநகரில் குண்டு வைத்து தகர்ப்புதற்கொலைப்படை தலைவர் தப்பியோட்டம்தலைவரின் தலைமகன் நாளை வருகைதிருவல்லிகேணியில் நேற்றிரவு திருட்டுவானூர்திநிலையத்தில் பிடிபட்டனர் போதைப்பொருள் கடத்தல்கள்ளக்காதலனுடன் கைது கணவன் கொலைவழக்கில்வன்கலவி சிறுமியிடம் வாலிபர் கைது விசாரணை நடந்துவருகிறதுகையூட்டு வாங்கிய அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார்இருவேறு சாலை விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்தனர் கவலைக்கிடமாக ஏழுபேர் மருத்துவமனையில்பிரபல அரசியல்வாதி கொலைவழக்கில் இன்று பிணையம் பெற்றார்வரி ஏய்ப்பு லட்சகணக்கில் தொழிலதிபர் செய்த மோசடி அம்பலம்நடிகையின் விவாகரத்து வழக்கு புது நாயகனுடன் இன்று நேரில் வந்தார்நாடாளுமன்றத்தில் அவை ஒத்...
ம-ர-ண-ம்

ம-ர-ண-ம்

கவிதை, படைப்புகள்
நிற்குமிடத்திலிருந்தே தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பிறருக்கு தந்துகொண்டும் எத்தனை உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்தது அதன் உடம்பில்இதுவரையில் வாழ்வளித்துவந்தது வந்த புயலையெல்லாம் புறம் தள்ளி இன்று நெடுஞ்சாலைத்துறை நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது துண்டு துண்டுகளாய்- சே.ராஜப்ரியன்...