Shadow

பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது

bigg-boss-3-day-59

‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ பாடலோடு ஆரம்பித்தது நாள்.

முதல் டாஸ்க், தர்ஷன் விலங்குகள் போல் மிமிக்ரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். ‘காலங்கார்த்தால எந்திரிச்சு நாய் மாதிரி கத்திட்டு இருக்கியே?’ என நம் வீட்டில் கேட்பார்கள் இல்லையா? அதை அங்கே லைவ்வாக காட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் விதவிதமாகக் கத்திக் கொண்டு இருந்தனர். கஸ்தூரி, சேரன் இரண்டு பேரும் ஓரளவுக்கு நன்றாகச் செய்தனர்.

சேரன் மிமிக்ரி செய்யும் போது கவினின் எதிர்வினையை யாரேனும் கவனித்தீர்களா? சாண்டி மேல சாய்ந்து கொண்டு, தனக்கு இது பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாக உடல்மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நண்பர்களுக்கு இடையிய் இதைச் செய்யும் போது எந்த பிரச்சினையும் இல்லை. அப்போதைக்குத் திட்டிவிடலாம், இல்ல செல்லமாக உதைத்து விட்டுப் போகலாம், இல்ல திரும்ப ஒரு சந்தர்ப்பத்தில் பழிவாங்கிவிடலாம். ஆனால் தனக்கு இது பிடிக்கவில்லை எனச் சொல்கின்ற ஒருவரைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறது ரொம்ப மோசமான விஷயம். இதெல்லாம் ஒரு மேட்டரா என நிறைய பேருக்குத் தோன்றலாம். ஆனால் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததென்றால், சம்பந்தப்பட்ட நபர் மனதளவில் பாதிக்கப்படுவது உறுதி.

இதைக் கேட்கக் கூட முடியாது. கேட்டாலும், ‘நான் சும்மா சாண்டி மேல சாஞ்சேன்’ எனச் சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார். இது மாதிரி நிறைய விஷயத்தில் நோட் பண்ணியிருக்கேன். சேரன் பேசும் போது, நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறது, தலையைத் தாழ்த்திக் கொண்டு சன்னமாகப் பேசி சிரிக்கிறது. இது மாதிரி நிறைய சொல்லலாம்.

இதை அனைத்தையும் எடிட்டிங்கில் கரெக்டாக பிக்கப் செய்திருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த விஷயம் தொடர்ந்து நடக்கிறது என்று தானே அர்த்தம். கமல் கூட இதைக் கேட்க முடியாது.

கஸ்தூரி-வனிதா இடையே மறுபடியும் ஒரு சின்ன உரசல். வாத்து எனச் சொன்னதுக்கு ஏதோ விளக்கம் கொடுத்து, வனிதா பேசினதிலிருந்து பாயின்ட் எடுத்துப் பேச, வனிதா ‘ஆளை விடுடா சாமி’ எனத் தெறித்து ஓடினார். உண்மையாகவே அவங்க வனிதாவிற்கு அட்வைஸ் செய்ய வந்தாரா இல்ல கலாய்த்தாரா எனத் தெரியவில்லை.

ஸ்கூல் டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. இம்முறை 3 வது படிக்கின்ற மாணவர்களாம். அப்பவும் சாண்டி அதே மாதிரி நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சேரன் தமிழாசிரியராக மாறி தமிழ் கற்றுக் கொடுத்தார். ‘அறம் செய்ய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என இறுதியில் முகின் பாடின ராப் செம்மையாக இருந்தது.

நா நகிழ் வார்த்தைகள் சொல்லவேண்டும். எல்லோருமே நன்றாகச் சொன்னார்கள். பள்ளி நாட்களைப் பற்றி ஒரு பாடல் இயற்றிப் பாடவேண்டுமெனச் சொன்னதும், இது எங்களுக்கு ஜூஜூபினு அசத்திவிட்டனர். பாட்டில் கஸ்தூரியைக் கலாய்த்து, சேரனை ஜஸ்ட் பாஸ் பண்ணி விட்டுட்டார். ஆனால் கஸ்தூரி இதற்கு ஒரு எதிர்ப்பாட்டு வைத்திருந்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். அன்று சிறையில் பாடினார். இன்று இங்கே. நன்றாகவே இருந்தது.

வந்த போது, பாடல் வரிகளை மாற்றிப் பாடுவதைப் பத்தி கவினிடம் பேசிருப்பாங்க என நினைக்கிறேன். அப்போ நானும் இதையெல்லாம் செய்வேன் எனச் சொல்லிருப்பார். ஒருவேளை அதனாலேயே கவினுக்குக் கஸ்தூரியை பிடிக்காமல் போய்விட்டதோ? கவின் டீமாகச் செய்கின்ற ஒரு விஷயத்தை, கஸ்தூரி தனியாகச் செய்திருக்கிறார். குட் ஒன்.

டாஸ்க் முடிந்தது. எல்லோரும் க்ரூப் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பிறகு தங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ் சொல்லவேண்டும். தர்ஷன், சாண்டி சொன்னது நன்றாக இருந்தது. அதற்கப்புறம் வந்த கஸ்தூரி அழுது, சொல்ல வந்த விஷயத்தில்இருந்து வெளியே போய், எங்கெங்கோ போய்ச் சுற்றி, கடைசியில், ‘எப்படா முடிப்பாங்க?’ என ஃபீல் பண்ண வைத்துவிட்டார்.

பள்ளி ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தை விட, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த என் மகளிடம் நான் கற்றுக் கொண்டது அதிகம். இது தான் கஸ்தூரி சொல்ல வந்ததின் சாராம்சம். ஆனால் அதைச் சரியாகச் சொல்லாமல் விட்டதனால், அவருக்குக் கிடைக்க வேண்டிய சிம்பதி கிடைக்காமல் போய்விட்டது.

டைரக்டர் பி.வாசுவோட தனது பயணத்தைப் பற்றிச் சொன்னார் வனிதா. தனக்குள் சினிமா கனவை விதைத்த தன் ஆசிரியரைப் பற்ற சொன்னார் சேரன். அதற்கப்புறம் கே.எஸ்.ரவிக்குமாரோடான தன் உறவைப் பகிர்ந்து கொண்டது ஆசம். சினிமா உலகத்தில், நிறைய குரு சிஷ்யன் உறவுகள் இருக்கு. கே.பாலச்சந்தர் – ரஜினி – கமல், பாரதிராஜா – பாக்யராஜ் – பாண்டியராஜன் – பார்த்திபன், இப்படி நிறைய பேரைச் சொல்லலாம். எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு குரு-சிஷ்யன் உறவு கே.எஸ். ரவிக்குமார் – சேரன் தான். விஜய் டிவியில், காபி வித் டிடி நிகழ்ச்சியில், இவங்க இரண்டு பேரும் வந்த எபிசோட் ஒன்றிருக்கு. முடிந்தாக் பார்க்கவும். இவ்வளவு பெரிய இயக்குநர், தேசிய விருது வாங்கியதற்குப் பிறகும், தன் குரு முன்னாடி எப்படி உட்காந்திருப்பாரு எனப் பாருங்கள். டிடி கூட இதைப் பற்றி ஆச்சரியமாகக் கேட்டார். சேரன் எழுதின புத்தகத்திலேயும் ரவிக்குமார் பற்றி நிறைய எழுதியிருப்பார். ஒன் ஆப் தி பெஸ்ட்.

மாயக்கண்ணாடி படத்தில் ராதாரவி கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது, அதை ரவிக்குமாரை மனதில் வைத்து தான் உருவாக்கி இருப்பாரோ எனத் தோன்றும்.

நாளைக்கு பெஸ்ட் பெர்ஃபாமர் ரிவியூவில் ஒரு பஞ்சாயத்து இருக்கு. யார் பேர் வருது, யார் யார் பேசறாங்க எனப் பார்க்கலாம். வனிதாவுக்கும், சேரனுக்கும் நேரடியான மோதல் இதுவரைக்கும் எதுவும் இல்லை. ஆனால் தன்னோட நேர்மையை வெளிப்படுத்த, வனிதா பேரை சேரன் சொல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அதை வனிதா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று தான் தெரியவில்லை.

கவின் – லாஸ் உறவைப் பற்றி தர்ஷனிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். தர்ஷன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார். கடுமையான போட்டியாளர் என்று தான் தர்ஷனை நாமினேட் செய்கிறார். தன்னை விட வயதில், அனுபவத்தில் மூத்த ஒரு இயக்குநர் தன்னைச் சரிக்குச் சமமாக உட்கார வைத்துப் பேசுவது தர்ஷனுக்கு ஓர் அங்கீகாரம் தான். கவின் – லாஸ் பற்றிக் கேட்ட போது, எனக்கும் இதை எப்படி சொல்வதெனத் தெரியவில்லை என்று தர்ஷனும் சொல்கிறார்.

இவர்கள் உள்ளே பேச, வெளியே கவின் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். லாஸ் முழுவதுமாக விழுந்து விட்டார் என்று தான் நினைக்கின்றேன். இதை வெளியே இருந்து பார்க்கின்ற சாக்‌ஷி என்ன ஃபீல் பண்ணுவாங்க என நினைத்துப் பார்க்கிறேன். 50 நாள் இடைவெளியில், இரண்டு பெண்களை தன் வலையில் விழ வைத்த கவினுக்குப் பெண்கள் மத்தியில் தான் செம்ம கிரேஸ் இருக்கின்றதாம். இது எப்படி சாத்தியம் என பெண்கள் தான் சொல்லவேண்டும். என்னமோ போய்யா கவினு! ஆனா மொரட்டு சிங்கிள் பசங்க சாபம் உன்னை சும்மா விடாது. பார்த்துக்க..

– மகாதேவன் CM