பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல்
இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோவிற்கு எதற்கு கமல்?
கமலுக்கு இது தேவையில்லாத வேலை. அவரோட தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார் என ஃபீல் செய்பவர்கள், நேற்றைய அத்தியாயத்தை ஒரு தடவை பார்க்கவேண்டும். 100 நாள் பூட்டின வீட்டிற்குள் இருக்கப் போற கன்டெஸ்டன்ட்ஸ், பாதி கிணற்றைத் தாண்டி ஒரு வழியாக அவர்களே தன்னை ஒரு மாதிரியாக செட்டில் பண்ணி வைத்துள்ளனர். ஒரு நல்ல க்ரூப் ஃபார்ம் ஆகியிருக்கு, ஒரு பாச உறவு, ஒரு காதல், இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இப்படி எல்லாமே இருக்கு. சரி இதை இப்படியே விட்டால் என்னாகும்? ஒவ்வொரு தடவையும் கூடிக் கூடிப் பேசி, 'இந்த வாட்டி கேப்டன் பொறுப்பை நீ எடுத்துக்கோடா. இந்த டாஸ்க்ல வின்னரா உன் பேரைச் சொல்லிக்கலாம். அடுத்த டாஸ்க்ல நீ என் பேரைச் சொல்லிடு' என வந்து நிற்கும். இதை உணர்ந்து கொண்ட பிக் பாஸ் டீம், ஒவ்வொரு கன்டஸ்டென்ட்டுக்கும் அவர்கள் எப்படி இருந்தார்கள், இப்பொழுது எந்த இடத...