Shadow

சினிமா

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

சினிமா, திரைத் துளி
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குநர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான "ஆண் தேவதை" படத்தின் இசை வெளியீடு 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழினத் தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாகக் கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து "ஆண் தேவதை" திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில், "ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு இந்தக் காலகட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ்த்திரை உலகிற்குச் செய்த சேவைகளும் சாதனைகளும் அதிகம். 'ஆண் தேவதை' இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்யவேண்டிய ...
லேடி சூப்பர் ஸ்டார் 2019

லேடி சூப்பர் ஸ்டார் 2019

சினிமா, திரைத் துளி
நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது என்றார் ஜமீல். "இந்தக் கதையையும் , திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்தக் கதையின் நாயகி அழகும் அறிவும் தீரமும் இளமையும் நிறைய பெற்றவள். ஹன்சிகா உரிமையுடன் இந்தக் கதாபாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வ...
குணசித்திர நடிகர் லதா ராவ்

குணசித்திர நடிகர் லதா ராவ்

சினிமா, திரைத் துளி
கடிகார மனிதர்கள் படத்தில், கிஷோருக்கு ஜோடியாக மிக யதார்த்தமானதொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் லதா ராவ். சின்ன வீட்டில், வீட்டு உரிமையாளருக்குப் பயந்து, கணவனின் நிலை உணர்ந்து அனுசரணையாக இருக்கும் அன்பான மனைவி பாத்திரத்திக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தார். லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். தென்னிந்தியத் தொடர்களில் நான்கு மொழிகளிலிலுமே தஒன்றி, சின்னத்திரையில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிப் திரைப்படங்களில் வாய்ப்பினைத் தேடி வந்தார். முதன்முதலில் வடிவேலுக்கு ஜோடியாக, 2010 இல் வெளிவந்த 'தில்லாலங்கடி' என்ற படத்தில் உஷா எனும் காமெடிக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்...
பாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில்

பாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில்

சினிமா, திரைத் துளி
கஸ்தூரி ராஜா எழுதி இயக்கும் புதிய படம் பாண்டிமுனி. இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். "பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது. பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாகக் கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது. இந்தக் கோயில் தோன்றி சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்தக் கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்க...
பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது

பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது

சினிமா
உல்லாசம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிப் பல முன்னனி நடிகர்களுடன் பல விளம்பரப்படத்தை இயக்கி முன்னனி இயக்குநராகத் திகழ்பவர் ஜேடி ஜெர்ரி. இவரின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார். தற்போது பிரியதர்சன் ஜோ ஜெர்ரி ஒரு விளம்பரப்படத்தைத் தயாரித்து, இசையமைத்து, இயக்கி ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தந்தையைப் போலவே மகனும் தனது முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்துள்ளார். ஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட விளம்பரப்படப் போட்டியில், "இன்டர்வியூ" என்ற தலைப்பில் பங்கேற்ற 300 படங்களில் ஜோ ஜெர்ரியின் விளம்பரப் படம் முதலிடம் பெற்று 1 லட்ச ரூபாய் பரிசை வென்றுள்ளது. “இது நாங்கள் பங்கேற்ற முதல் போட்டி. நான் இயக்கிய முதல் விளம்பரம். எங்கள் குழுவுக்கு ஓர் அற்புதமான அனுபவம்” என்றார் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி....
காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார். தமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசாலிங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்பி...
அரளி விமர்சனம்

அரளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே குறியீடாகக் கதையைச் சொல்லிவிடுகின்றனர். பூக்களாகத் தோன்றும் அரளி, பூக்கள் உதிர்ந்து விஷமாய் எஞ்சுகிறது. எத்தனை பேருக்கு இது புரியுமென்ற கவலையில், இயக்குநர் படத்தலைப்பின் பொருளை க்ளைமேக்ஸில் வசனமாகவும் வைத்துள்ளார். அவரது இந்தக் கவலை படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தே அப்பட்டமாய்த் தெரிகிறது. நேரடியாகக் கதைக்குள் சென்று, அது யாருக்கேனும் புரியாவிட்டால் என்ன செய்வதென அஞ்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இன்னாரென்று வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகிறார். நாயகிக்கு, மனிதர்களை விடப் பணமே பிரதானமாய் உள்ளது. அதற்காக அவர் எந்த எல்லைக்குப் போகிறார் என்றும், அதனால் எத்தகைய பாதிப்புகள் விளைகிறது என்பதும்தான் படத்தின் கதை. உள்ளபடிக்குக் கதை இடைவேளையின் பொழுது தான் தொடங்குகிறது. அதற்கு முன்பான திரைக்கதை, கதைக்கு உதவாத பில்டப்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணேசன் எனும் பாத்திரத்திற்கு வேலை போகக...
மகிழ் திருமேனியின் “தடம்”

மகிழ் திருமேனியின் “தடம்”

சினிமா, திரைத் துளி
அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாகத் தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது தடம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தைப் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், 'தடம்' படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படம் தணிக்கைக் குழுவினருக்குக் காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தைத் தணிக்கைக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியதில் குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நிகழவுள்ளது....
மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா. "லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்" என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் தோன்றி மறைகிறார். "என் தம்பி" என்ற அடைமொழியுடன் அவரது பெயரைத் திரையில் காட்டுகிறார் தம்பி ராமையா. 'கலக்கப் போவது யாரு' ராமரும் தங்கதுரையும், சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி Y.G.மகேந்திரன் போன்றோர் கெளரவத் தோற்றத்தில் வருகின்றனர். அனைவரும் தனக்குரிய காட்சிகளை நிறைவாகச் செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ள...
இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை

இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை

சினிமா, திரைச் செய்தி
நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கிச் சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்த கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தியிடம் 'எச்சரிக்கை'யாகத் தனது படத்தை ஒப்படைத்துவிட்டது படக்குழு. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்', விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' , விஜய் மில்டனின் 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநரான சர்ஜுன் யூ-டியூப்பில் பிரபலமான மா,...
மிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள்!

மிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள்!

சினிமா, திரைச் செய்தி
KNR மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்'. பொறுக்கிஸ்க்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப்-டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.மஞ்சுநாத் ‘பொறுக்கிஸ்’படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளரான ராஜாவே இதில் கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, “நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டு வந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத்தான் இந்தப் படம் ...
கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. ‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்...
எங்க காட்டுல மழை விமர்சனம்

எங்க காட்டுல மழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துவிட்ட முருகனுக்கும் குபேரனுக்கும் ஒரு பெட்டி நிறைய அமெரிக்க டாலர்கள் ($) கிடைக்கிறது. அப்பணத்தைத் தொலைத்த சேட்டு ஒருபுறமும், அதைச் சேட்டிடம் இருந்து திருடிய போலீஸ் அதிகாரியொருவர் மறுபுறமும் தேடுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் முருகனும் குபேரனும் எப்படித் தப்பிக்கின்றனர், பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. முருகனாக மிதுன் மகேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் வலுவான பின்னணி இல்லை. சென்னை வரும் முருகனுக்கு, 'மதுரைக்காரன்' என்ற ஒரே காரணத்திற்காக வீடு கிடைக்கிறது. அதுவும் மிக மிகச் சுலபமாக. அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் படத்தின் எல்லாக் கதாப்பாத்திரங்களும் இப்படித்தான் வந்து செல்கின்றன. இளமைத் துள்ளலுடன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், மிதுன் மகேஸ்வரன், முருகன் எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். எந்தப்...