Shadow

சினிமா

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

சினிமா, திரைத் துளி
83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படத்தைத் தயாரிக்கிறது இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையைப் படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர். "டாக்டர் ஜெ.ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்திப் பெற்றப் பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர். உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரை துறையிலும், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்தப் படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தப் படத்தைத் துவக்க இருக்கிறோம். அன்றே ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட இருக்கிறோம்" என்கிறார் vibr...
ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு. உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், ஓநாய் தனது கூட்டத்துடனும் இணைந்ததா என்பதே ஆல்ஃபா படத்தின் கதை. 96 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ (Kodi Smit- McPhee), லியானோர் வரேலா (Leonor Varela), ஜென்ஸ் ஹல்டன் ( Jens Hultén) மற்றும் யோஹனஸ் ஹெளகுர் யோஹனசன் (Jóhannes Haukur Jóhannesson)ஆகியோர் நடித்துள்ளன...
நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கில், 'சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஆந்திரத் திரையுலகினரே அதிசயித்த படமது. அப்படத்தைத் தமிழில், 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என மொழிமாற்றம் செய்து மொயின் பேக் வழங்க, ரோல்ஸ் பிரைட் மீடியா ப்ரைவேட் லிமிடெட் படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். >> இசை - மிக்கி ஜே.மேயர் >> பாடல் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர். >> படத்தொகுப்பு - நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம் >> தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா >> இயக்கம் - ஸ்ரீகாந்த் இவர் ...
செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

சினிமா, திரைச் செய்தி
கணவன், மனைவிக்கு இடையில், ஒரு ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பது தான் ஓடு ராஜா ஓடு படத்தின் மையக்கரு. விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நான்கு முக்கிய கேரக்டர்கள் 24 மணி நேரத்தில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையான திரைக்கதையாக்கிருக்கிறார்கள். ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியா லக்ஷ்மி பிரியா நடித்துள்ளார். நாசர், சோனா, ஆஷிகா எனப் பெரும் நடிகர் பட்டாளமே உள்ளது படத்தில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாசர், “சமீபமா சினிமாவுக்கு வர்ற இயக்குநர்கள்லாம் நல்லா படிச்சவங்களா இருக்காங்க. அதனால நிறைய வித்தியாசமான படங்கள் வருது. அந்த மாதிரி ஒரு படம்தான் ஓடு ராஜா ஓடு. எத்தனையோ படங்கள் நடிச்சாலும் ஒருசில படங்கள் மட்டும்தான் அதிக ஈடுபாட்டோட நடிக்கிற மாதிரி அமையும். அந்த வக...
ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

ஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.விஜய் பேசுகையில், "இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன" என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில...
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந...
வித்யாசாகர் இசையில் ஆருத்ரா

வித்யாசாகர் இசையில் ஆருத்ரா

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் இமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், "எனக்கும் பா.விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது. இந்தப் படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சம...
சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசுகையில், "இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனத் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்து கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள். இதற்காகத் திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய...
எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை

எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை

சினிமா, திரைத் துளி
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் - “சீமத்துரை”. கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாகவும் நடிக்க விஜி சந்திரசேகர், 'கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில் புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமையும். அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். மேலும், “கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அ...
சூதாட்ட நகரில் காவியன்

சூதாட்ட நகரில் காவியன்

சினிமா, திரைத் துளி
2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம்‘காவியன்’ இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம்‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஓர் இடம். இரவு நேரங்கள் கூடப் பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறி...
திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா

திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் பிரபு என்பவர் இயக்கும் "திரு. குரல்" என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்புத் துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். >> கலை - தியாகராஜன் >> சண்டை - ஹரி >> நடனம் - ஸ்ரீ க்ரிஷ் >> விநியோகம் (உலகமெங்கும்) - சிங்காரவேலன்...
விஸ்வரூபம்.. II விமர்சனம்

விஸ்வரூபம்.. II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன? ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர். அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்ல...
பியார் பிரேமா காதல் விமர்சனம்

பியார் பிரேமா காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான். ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில்...
எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பணம் போட்டவர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. ட்ரெய்லர் மிக நன்றாக வந்துள்ளதாக 'எம்பிரான்' தயாரிப்பாளர்கள் பி.பஞ்சவர்ணமும் வி.சுமலதாவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். தயாரிப்பாளர் வி.சுமலதா கூறும்போது, "ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 'குருட்டுத்தனமான வாய்ப்பு' முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரைக் காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் ட்ரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விடச் சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மி...