Shadow

சினிமா

கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் ...
தி ஒரிஜினல் ரியாமிகா

தி ஒரிஜினல் ரியாமிகா

சினிமா, திரைத் துளி
ரியாமிகா என்ற பெயருக்கு ஒரிஜினல் எனப் பொருளாம். சமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே! அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு வர ஒரு காரணம்.. படிக்கும்போதே சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தது. ஆனால் தற்போது வெளியான X வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது. X வீடியோஸ் படத்தின் இயக்குநர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்...
சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே! அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார். யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனைp பாட வைத்துள்ளார். இப்பாடல் விரைவில் வெளிவரவுள்ளது....
ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார். ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட 'சினிமா பாரடைஸ்' எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157 ந...
பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன்

பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன்

சினிமா, திரைத் துளி
ஒரு நடிகைக்கான மிகப் பெரிய சாதனை 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுவதோ, 'பாக்ஸ் ஆஃபீஸ் குயின்' ஆக இருப்பதோ இல்லை. 'நாயகி மையப்படுத்திய படங்கள்' என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்தத் தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்தச் சூழ்நிலையை உருவாக்க ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டார். அவருக்கு இருப்பது வெறும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா'வின் வெளியீட்டை வர்த்தகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையு...
28 நாட்களில் முடிந்த கழுகு – 2

28 நாட்களில் முடிந்த கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா, 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்துக் கொடுத்துள்ளார். 4 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரம் 7 கோடியைத் தாண்டும் என சினிமா வட்டாரத்தினாரால நம்பப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்புப் பணிகளையும் முடித்து படத்தை வெளியிடவுள்ளது, தற்போதைய தமிழ் சினிமா சூழலில் மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது....
தமிழில் அறிமுகமாகிறார் சமீர் கோச்சார்

தமிழில் அறிமுகமாகிறார் சமீர் கோச்சார்

சினிமா, திரைத் துளி
இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்.” போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது “NETFLIX” வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “Sacred Games (சேக்ரட் கேம்ஸ்)” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3” போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், “Century International Films” தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந...
தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் 'சிவா மனசுல புஷ்பா'. ‘இந்தப் படத்தின் தலைப்பைத் தூக்குங்கள்’ எனக் கூறித் தயாரிப்பாளரும் இயக்குநருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள். இந்தப் பிரச்சனையைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்காகவும், சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வாராகி. "நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம். சம கால நிகழ்வுகளைக் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன். படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடங்கள் தான். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அ...
ViU – செம ஃபீலு ப்ரோ!

ViU – செம ஃபீலு ப்ரோ!

சினிமா, திரைச் செய்தி
உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிற...