Shadow

சினிமா

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல். “படத்தில் ஒப்பந்த...
மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

சினிமா, திரைத் துளி
“தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே...
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

சினிமா, திரைச் செய்தி
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 1 மூவிபஃப், 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகை தந்த அனைத்து இளந்தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதைக்களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்தக் குறும்படப் போட்டியைத் தொடங்கியிருக்கிறோம். தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையைக் குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களைப் பரவசமடைய...
உதயநிதியை நிமிர வைக்கும் படம்

உதயநிதியை நிமிர வைக்கும் படம்

சினிமா, திரைச் செய்தி
மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். “ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள்” என்றார் நாயகி பார்வதி. “தமிழில் ‘நிமிர்’ எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் ப்ரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் எனச் சொன்னதை யாரும்...
அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

சினிமா, திரைச் செய்தி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு தேவாவின் பிரபு ஸ்டூடியோஸின் கூட்டுத் தயாரிப்பில், டி.இமான் இசையில், அருள்மூர்த்தி இயக்கும் அனிமேஷன் திரைப்படம் "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ". மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) புனைவு அனிமேஷன் கதாபாத்திரம் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் தலைப்பும் கதையும் எம்.ஜி.ஆருடையதேயாகும். இது எம்.ஜி.ஆரின் கனவுப் படம் என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். பதிவிட்டிருந்தார். 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாகக் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அக்கனவை நனவாக்கும் வகையில் ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் & வ...
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

அரசியல், கட்டுரை, சினிமா, புத்தகம்
ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும் த...
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, 'சொடுக்கு' பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தியாதகத் தெரியவில்லை. சுவாரசியத்தைப் படம் முழுக்கத் தக்க வைக்க ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு உதவியுள்ளது. ஆனாலும், காட்சிகளுக்கு இடையேயான 'ஜெர்க்'கும் அவசரமும், கோர்வையின்மைக்கு வழி வகுத்துள்ளது. ஜான்சி ராணியாகவும், அழகு மீனாவாகவும் ...
ஸ்கெட்ச் விமர்சனம்

ஸ்கெட்ச் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் பெராடி நிறைவாக நடித்துள்ளார். படத்தின் திரைக்கதை, தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொண்டு சுவாரசியப்படுத்த முற்படவில்லை. விக்ரமின் உடல்மொழியும், வசனம் உச்சரிக்கும் தொனியும் ஒரு டெம்ப்ளட்க்குள் உறைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வது மிக அவசியம். காரின...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்...
நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி.

நல்ல நாள் பார்த்திருக்கும் சன் டி.வி.

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், 'அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்’ மற்றும் '7C's என்டர்டெயின்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ...
மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்

மன்சூர் அலி கானின் மாறுபட்ட வேடத்தில்

சினிமா, திரைச் செய்தி
“கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” எனும் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும், ‘மஸ்காரா’ அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உ...
குலேபகாவலி – பொங்கல் விருந்து

குலேபகாவலி – பொங்கல் விருந்து

சினிமா, திரைத் துளி
KJR ஸ்டுடியோஸ் சார்பாகக் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகி பாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாகப் படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசனக் காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அதிலும் இதில் வரும், "...