Shadow

சினிமா

சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும், பேய்கள் யாரையும் கொல்வதில்லை. மாறாகச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தன் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றன பேய்கள். பாழடைந்த கோட்டை போன்ற பங்களாக்குள் சிக்கிக் கொள்ளும் ஒன்பது சிறுவர்களை பணப்பேய் பிடித்த மனிதர்கள் கொல்லப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சிறுவர்களைப் பேய்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதுதான் படத்தின் கதை. படத்தில் அழகழகான சிறுவர்களின் பட்டாளம் ஒன்றுள்ளது. குட்டிப் பேய் மலராக நடித்திருக்கும் மோனிகா செம க்யூட். தனிமையில் விளையாட ஆள் இல்லாமல் தவிக்கும் அந்தக் குட்டிப் பேய்க்குச் சிறுவர்களைப் பார்த்ததும் செம குதூகலமாகி விடுகிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள திலீப் சுப்புராயன், ஆகாயம் எனும் குழந்தைக் கடத்தல்காரனாக நடித்துள்ளார். நல்ல காமிக்கலான கதாபாத்திரத்தை நகைச்சுவையாகச் செய்துள்ளார். ...
ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம். பள்ளியில் நான்கு மாணவர்களை 'டெடன்ஷன்' செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள 'ஜுமான்ஜி' எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, 'கர்வி ஜீனியஸ்' என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் பு...
நிமிர் – மகேந்திரன் சூட்டிய தலைப்பு

நிமிர் – மகேந்திரன் சூட்டிய தலைப்பு

சினிமா, திரைத் துளி
பொதுவாக ஒரு படம் எந்த வகையைச் சேரும், அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M.S.பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'நிமிர்' என்ற தலைப்பைக் குறித்து இயக்குநர் ப்ரியதர்ஷன் பேசுகையில், ''எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிகப் பெருமையான விஷயம். நான் பல கா...
ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
லக்கி ஸ்டார் எனும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது 'நான் கடவுள்' ராஜேந்திரனுக்கு. பேய்ப்படமான 'ஆறாம் திணை' படத்தின் நாயகனும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. பேய்களுக்கும் லாஜிக் உண்டு என்ற கருவோடு, முதல்முறையாகப் பேய்களுக்கு ஃப்ளாஷ்-பேக்கும் வைக்காமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஈரோடு அருண்.சி. 'ஆறாம் திணை'க்கு, பேயும் பேய் சார்ந்த இடமும் எனக் கேப்ஷன் அளித்துள்னர்.  கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.  முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ளார். “பேய் உண்மையிலேயே இருக்கு. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படிப் பல பேய்கள் நமக்குள்ளேயே...
டாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்

டாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்

சினிமா, திரைத் துளி
நார்வே நாட்டில் வசிக்கும் டி.எஸ்.ஜெயராஜன், தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சாய்பாபா பற்றிய திரைப்படமான ‘அபூர்வ மகான்’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடி, பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தஷி இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் படமும் பரவலான கவனத்தை ஈர்த்தது. டி.எஸ்.ஜெயராஜின் குரலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, தஷி இசையமைப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஹார்ட் பீட், ‘மாய வீடு’ ஆகிய படங்களிலும் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜனுக்கு, மேலும் பல படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளது. திரைப்படங்களில் பாடுவதோடு, பல இசை ஆல்பங்களில் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், ஐயப்பன், சாய் பாபா, வள்ளலார் ஆகியோர் பற்றிய 50 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களைப் பாடித் தயாரித்துள்ளார். பக்திப் பாடல்கள் பாடுவதைத் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக வைத்திருக்கும் இவர், பக்தி பாடல்களை எழுதிப் பாடுவதோடு, தனத...
அருவி சுருங்கிய புள்ளி

அருவி சுருங்கிய புள்ளி

சினிமா, திரைச் செய்தி
அருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் சுதந்திரம் ஓர் இயக்குநருக்கு முழுமையாக உண்டு. ஆனால், அதன் ஊடாக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விதைக்கும் விஷமத்தனம் ஆபத்தானது. அனைத்துமே கற்பனை என்ற டிஸ்க்ளெயிமர் போட்டு விட்டால், ஜீ டிவியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான் டார்கெட் என்ற உண்மையை மறைக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியைக் கலாய்ப்பது என்பது வேறு, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரைக் கேரக்டர் அசாஸினேட் செய்வது என்பது வேறு. 'Bee டிவியின் 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சித் தொகுப்பாளரான 'ஷோபா பார்த்தசாரதி' முந்தானையை நழுவ விடுவதாகக் காட்சி அமைத்திருப்பார். அது முற்றிலும் கற்பனை தான் என இயக்குநர் சொன்னாலும், இனி ஆகப் போவது ஒன்றுமில்லை. சமூகப் பிரக்ஞையுடைய படமெனப் போற்றப்படும் படைப்பில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எ...
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார். காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ராமேஷ...
மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை. மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை. தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர...
சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்

சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். சிங்கப்பூர் அரசின் மீடியா டெவலப்மென்ட் வாரியமும் (MDA), தமிழ்த் திரையுலகமும் கை கோர்த்துள்ள முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராகும் கனவில் ஹரீஷ் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கிறான். அங்கு அவனுக்கு என்ன நடந்தது என்றும், நினைத்தது போல் திரைப்படம் இயக்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகன் கோகுல் ஆனந்த பல ஃப்ரேம்களில் துல்கரை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார். ஏமாற்றப்படும் கோபத்தில் அவர் செய்யும் ஒரு காரியம், அவரது ஃப்யூச்சரைத் தலைதெறிக்க ஓடச் செய்கிறது. ஆம், ஃப்யூச்சரே (எதிர்காலம்) தான். ஃப்யூச்சர்கள் எனப் பன்மையில் கூடச் சொல்லலாம். அவரது கனவு அவரை விட்டு தூரம் செல்கிறது எனப் படத்தின் தொடக்கமே காமிக்கலாகக் காட்டப்படுகிறது. “யார்றா இவன்? எங்கிருந்துடா வர்றான்?”...
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய் எழும் அதன் வேகத்தில் தலையை நுழைப்பது விவரிக்க இயலா ஆனந்தத்தைத் தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டத் தொடங்கிவிடும். சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அருவியில் கரைவது குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இப்படமும் அத்தகைய உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. அருவி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கை, அதன் பாதையில் இருந்து விலக நேர்கிறது. எங்கோ தொடங்கி எப்படியோ முடிகிறது அருவியின் வாழ்க்கை. ஜீ டி.வி.யின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைச் ’சொல்வதெல்லாம் சத்தியம்’ எனச் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளனர். மீம்ஸ் யுக மேம்போக்கான கிண்டல் இல்லை. அவர்கள் தரப்பு சங்கடங்களையும் பதிந்துள்ளது சிறப்பு. ஒவ்வொரு எபிசோடையும் பிளான் செய்ய, ஆட்களை ஒருங்கிணைக்க, தொகுப்பாள...
ஜுமாஞ்சி – காட்டிற்கு வரவேற்கும் விளையாட்டு

ஜுமாஞ்சி – காட்டிற்கு வரவேற்கும் விளையாட்டு

அயல் சினிமா, திரைத் துளி
ஜோ ஜான்ஸ்டனின் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு ஜுமாஞ்சி எனும் திரைப்படம் வந்தது. அப்படத்தைப் பார்த்தவர்கள் யாரும் அந்தப் படம் தந்த அற்புதமான அனுபவத்தை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. போலீஸ் வாகனத்தை ஓட்டும் குரங்குகள், வீட்டுக்குள் வரும் வெள்ளம், சிங்கம், நெடுஞ்சாலையில் ஓடும் மிருகங்கள் என அந்தப் படம் பற்றி நினைத்தாலே ஓர் உற்சாகம் எழும். அதனால் தான் அப்படம் வசூலில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியிருந்தது. க்றிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேஷக் காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா ஸ்டீஃபன் L. ப்ரைஸின் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura - A Space Adventure’ வெளியானது. 199...