சினிமா

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜினி...

யாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டிகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா, கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.இந்தத் தொடக்க விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது....

ஸ்பைடர் விமர்சனம்
தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம்.
பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன்.
இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்...

ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி
விக்ரம் வேதாவிற்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படம், படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு சான்று” என்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயிஷா...

கும்பகோணம் குணா
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர் அனைவருக்கும் தெரிந்தவராக நிஜத்தில் வாழ்ந்தவர். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங் ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் - மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது.
புதுமுகங்கள் விஷ்வா கதாநாயகனாகவும், நீரஜா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ‘பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட...

கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்
இந்திய இராணுவத்தில், 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய்ச் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கேயாஸ் தேற்றம். தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரசியமாய்த் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா. ‘டிப்ளமோ இன் ஃப்லிம் மேக்கிங்’ படித்து விட்டு, பல குறும்படங்களையும் டெலி ஃபிலிம்களையும் இயக்கியுள்ளார்.
பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொ...

ஹர ஹர மஹாதேவகி – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

கன்னட இயக்குநரின் தமிழ்ப்படம்
சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன்.
கேட்காமலே கேட்கும் எனும் திரைப்படம் - டெக்னாலஜி பேய்படம். செல்ஃபோனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்ஃபோனுக்குச் செல்கிறது. ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்ஃபோனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் கர்நாடகாவில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை. அவ...

பேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் – அமீர்
இன்றைய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைப்பாடுகளைச் சொல்ல வரும் படம் பாடம்.
இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாகத்தான் இந்தப் பாடம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக், நாயகியாக மோனா, முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குநர் நாகேந்திரன், R.N.R. மனோகர், நகைச்சுவை நடிகை மதுமிதா, யாசிகா, கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவினை மனோ செய்துள்ளார்.
பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி மோகன், “இன்றைய பள்ளிகளில், பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கபடுகிறது. ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்தப் ப...

கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்கக் காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்கப் பயணித்துள்ளன .
படம் பற்றி இயக்குநர் பேசும்போது, "அழிந்து வரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றிப் படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க ந...

பாடம் சொல்லும் ராஜசேகர்
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட சில குழப்பங்களால் பலி வாங்கப்பட்ட ஓர் உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'.
இயக்குநர் ராஜேஷுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் திரு.ஜிபின் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் பேசுகையில், ''சமீபத்தில் கூட ஒரு உயிரைப் பறித்த ஒரு முக்கிய சமுதாயப் பிரச்னையைப் பற்றி என் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் ம...





