Shadow

சினிமா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

சினிமா, திரைத் துளி
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மெனக்கெடலின் பொருட்டே, அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் அவருக்குக...
பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது. ...
பயமா இருக்கு விமர்சனம்

பயமா இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம். படத்தின் பிரதான...
விஜய் சேதுபதியின் எடக்கு

விஜய் சேதுபதியின் எடக்கு

சினிமா, திரைத் துளி
எடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகவுள்ளது” என்றார்....
வசீகர வெண்பா

வசீகர வெண்பா

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா. சமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையைப் படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு! அந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்யத் தயாராகி விட்டார். ஆம், இசையம...
பள்ளியும் காதலும் சாதியும்

பள்ளியும் காதலும் சாதியும்

சினிமா, திரைச் செய்தி
வி.கே.பி.டி.கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில், வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் சிறு வயது கேரக்டரிலும், ‘காதல் கசக்குதய்யா’ நாயகி வெண்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா, பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், பருத்தி வீரன் சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகர் நாசர் பேசும்போது, “இன்றையச் சமூகச் சூழலில் இன்னும் சாதீயத்தின் பிரம்பால் அடி வாங்கும் காதல் கதைதான் இந்தp பள்ளிப் பருவத்திலே திரைப்படம். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வரவேண்டும்” என்றார். படத்தின் கதாநாயகி வெண்பா பேசும்போது, “நான் தமிழ்ப் பெண் என்பதோடு நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொல்லி மேடையில் பலரும் பாராட்டினார்கள். இதைக் கேட்கும...
துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர்த...
பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்கக் கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்த...
கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்சு...
காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...
ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-விற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொ...
களத்தூர் கிராமத்து மிதுன்

களத்தூர் கிராமத்து மிதுன்

சினிமா, திரைத் துளி
செப்டம்பர் 15 அன்று, “களத்தூர் கிராமம்” எனும் படம் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் மிதுன் குமார். சினிமா பின்னணி உள்ள அவரது குடும்பம், “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற பேனரில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மகாநதி போன்ற படங்களைத் தயாரித்தவர்கள். தற்போது, மிதுன் “ஐராவத் என்டர்டெயின்மென்ட்ஸ்” எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தின் மூலம், 16 வயதினிலே படத்தின் டிஜிட்டல் வெர்ஷனைக் கொண்டு வரவுள்ளார். டால்பி அட்மாஸ் 11.1 டிஜிட்டல் சரவுண்டில் அதி நவீன் தொழில்நுட்பத்தால் ரீஸ்டோர் செய்யப்பட்டுள்ள முதல் இந்தியப் படமிது என்பது, “16 வயதினிலே” படத்துக்குக் கிடைத்துள்ள புதிய அங்கீகாரமாகும். மிதுன் தான் டிஜிட்டல் வெர்ஷனின் ரீஸ்டோரேஷன் இயக்குநரும் கூட! ...
வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...