Shadow

சினிமா

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் ...
விக்டோரியா & அப்துல் விமர்சனம்

விக்டோரியா & அப்துல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ். இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணிய...
சோலோ இசை – ஒரு பார்வை

சோலோ இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
'வாயை மூடி பேசவும்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் "சோலோ". தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். சோலோ - ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார். துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப "சிவாவின் உலகம்", "சேகரின் உலகம்", "ருத்ராவின் உலகம்" என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர். W...
சோலோ – டப்பிங் படம் இல்லை

சோலோ – டப்பிங் படம் இல்லை

சினிமா, திரைச் செய்தி
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ். “ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர்...
முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

சினிமா, திரைத் துளி
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை  இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவைக் கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தைப்...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோலும...