32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1261 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 3)
அந்தரன் விமர்சனம் | Andharan review சினிமா

அந்தரன் விமர்சனம் | Andharan review

அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது […]

25/06/2026 Dinesh R
Balan: The Boy விமர்சனம் அயல் சினிமா

Balan: The Boy விமர்சனம்

மஞ்ஞுமள் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரத்தின் படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் கதையை, ரோமஞ்சம், ஆவேஷம் முதலிய படங்களை எழுதி இயக்கிய ஜித்து மாதவன் இயற்றியுள்ளார்.  சிறையில் இருந்து தனது மகனுடன் வெளியேறும் இளம் தாய், புதுப்புது அடையாளங்களுடன் தன் வசிப்பிடத்தை மாற்றிய வண்ணமே உள்ளார். ஒரு வீட்டில் பாட்டியம்மாவைப் பார்த்துக் கொள்ளும் தாதியாகச் செல்லும் இடத்தில், தனது பால்ய வயது மகன் பாலனை எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விடுகிறார். பதின் பருவத்தை அடையும் அந்த மகன், தனது தாயைத் […]

20/06/2026 Dinesh R
நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review சினிமா

நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?’ எனப் பத்தாண்டுகளுக்கு முன் ‘பிச்சைக்காரன் (2016)‘ படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு […]

20/06/2026 Dinesh R
எங்கள் தங்கம் விமர்சனம் | Engal Thangam review அயல் சினிமா

எங்கள் தங்கம் விமர்சனம் | Engal Thangam review

154 UA+ ‘மா இன்ட்டி பங்காரம் (Maa Into Bangaram)’ எனும் தெலுங்குப் படத்தைத் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என டப் செய்துள்ளனர். ‘மா இன்ட்டி பங்காரம்’ என்றால் ‘எங்கள் வீட்டின் தங்கம்’ எனப் பொருள்படும். ‘எங்கள் தங்கம்’ என்ற தலைப்பிற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்ஜியார், ஜெயலலிதா நடிப்பில், 1970இல், ‘எங்கள் தங்கம்’ என்ற படம் வெளியானது. அப்படத்தைத் தயாரித்தவர்கள் முரசொலி மாறனும், மு.கருணாநிதியும் ஆவர். அவ்விருவரும் கடன் சிக்கலில் இருந்ததால் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் சம்பளம் […]

19/06/2026 Dinesh R
பரிமளா அண்ட் கோ விமர்சனம் | Parimala and Co review சினிமா

பரிமளா அண்ட் கோ விமர்சனம் | Parimala and Co review

கோடை விடுமுறையைக் குறிவைத்துக் குடும்பப்படமாகப் பரிமளா அண்ட் கோ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் மிடில் கிளாஸ் வாழ்வில் கலந்து நிறைந்துள்ளார் நாயகன் ஜெயராம். அவரது மனைவி ஊர்வசி, மகள்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் ஆவர். இவர்கள் மூவரும் தான் அவருக்கு உலகம். ரொம்பவும் ஜாலியாக வாழ்ந்து வரும் இந்தக் குடும்பத்திற்குள் லோக்கல் தாதாவான சாண்டி நுழைகிறார். ஜெயராம் மகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் ஜெயராம் ஃபேமிலி சாண்டியைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. அதன்பின் […]

05/06/2026 Dinesh R
பெத்தி விமர்சனம் | PEDDI review அயல் சினிமா

பெத்தி விமர்சனம் | PEDDI review

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பெத்தி, கமர்ஷியல் ரூட்டில் ஒரு அரசியலைப் பேசியுள்ளது. ஒரு பெரும் முதலாளிக்கு ராம்சரணும் அவரது மலையடிவாரத்தைச் சேர்ந்த மக்களும் நியாயமற்றக் கூலிக்கு வேலை செய்கின்றனர். ராம்சரணுக்கு எக்ஸ்ட்ரா திறமைகள் நிறைய உண்டு. அதிலொன்று கிரிக்கெட் ஆட்டம்! “ஆட்டக்கூலி” என அழைக்கப்படும் அவர் யார் தன்னை ஏலத்திற்கு எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் போய் விளையாடுவார். அது 1990 காலகட்டம். ராம்சரணின் மலையடிவாரம் அருகே ரயில் சேவை வேண்டும், அங்கு ரெயில் நின்று செல்லவேண்டும் என ஜெகபதிபாபு […]

05/06/2026 Dinesh R
He-Man and the Masters of the Universe விமர்சனம் அயல் சினிமா

He-Man and the Masters of the Universe விமர்சனம்

ஸ்வீடன் நடிகரான டால்ஃப் லண்ட்க்ரென் நடிப்பில் ஹீ-மேன் திரைப்படம் 1987 இல் வெளிவந்ததற்குப் பின், மீண்டும் லைவ்- ஆக்‌ஷன் திரைப்படமாக ஹீ-மேன் வர நாப்பது வருடங்களாகியுள்ளது. ரேண்டோர் ஆளுகின்ற எட்டர்னியாவைத் தாக்கி அழிக்கிறான் ஸ்கெலெட்டர். தன் மகன் ஆடன் க்ளெனைக் காப்பாற்ற, அவனை எட்டர்னியா கிரகத்தில் இருந்து வாளுடன் பூமிக்கு அனுப்பி வைக்கிறார் மகாராணி மர்லெனா. அவ்வாளை நீட்டி மந்திர வார்த்தைகளை உச்சரித்தால், சக்தியை அளிக்கவல்ல அற்புதமான அந்த வாளைத் தொலைத்து விடுகிறான் ஆடம். பதினைந்து வருடங்களாகப் […]

05/06/2026 Dinesh R
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review அயல் சினிமா

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், ‘தி ஹன்டர்’ என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் […]

29/05/2026 Dinesh R
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review இது புதிது

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் […]

28/05/2026 Dinesh R
சட்டென்று மாறுது வானிலை விமர்சனம் சினிமா

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு. மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் […]

16/05/2026 Dinesh R
கருப்பு விமர்சனம் | Karuppu review இது புதிது

கருப்பு விமர்சனம் | Karuppu review

நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும். பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து […]

15/05/2026 Dinesh R
EXAM விமர்சனம் | Amazon Prime Video OTT

EXAM விமர்சனம் | Amazon Prime Video

அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் – காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் […]

14/05/2026 Dinesh R
29* விமர்சனம் | 29 Tamil movie review இது புதிது

29* விமர்சனம் | 29 Tamil movie review

மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை. இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் […]

08/05/2026 Dinesh R
The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல் அயல் சினிமா

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் […]

01/05/2026 Dinesh R
கர விமர்சனம் | Kara review சினிமா

கர விமர்சனம் | Kara review

போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம். தனுஷ் தனது 16-ஆவது வயதில் […]

01/05/2026 Dinesh R