Shadow

இது புதிது

லவ் டுடே விமர்சனம்

லவ் டுடே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைய காதல் என்பதை விட இன்றைய இளைஞர்கள் பற்றிய படம் என்பதே பொருத்தமாக இருக்கும். App(a) Lock என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய யூத்களின் பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்து, காமெடி, காதல், சென்டிமென்ட், எமோஷன் என கலந்து கட்டி எழுதி இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். காலதாமதமான (Belated) தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிக்கின்றனர். நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி, காதலர்கள் இருவரின் மொபைல் ஃபோன்களையும் மாற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என தெரிந்து கொள்ள ஒரு வினோதமான நிபந்தனை விதிக்கிறார். உத்தமனின் ஃபோன் நிகிதாவிடமும், நிகிதாவின் ஃபோன் உத்தமனிடமும் செல்ல திரைக்கதை சூடு பிடிக்கிறது. தனது முதற்படமான கோமாளியில் யோகிபாபுவைக் குண...
நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொ...
“டிரைவர் ஜமுனா: டூப் போடாமல் கார் சாகசக்காட்சி” – ஐஸ்வர்யா ராஜேஷ்

“டிரைவர் ஜமுனா: டூப் போடாமல் கார் சாகசக்காட்சி” – ஐஸ்வர்யா ராஜேஷ்

இது புதிது
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தத் திரைப்படத்தை வத்திக்குச்சி படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ''...
படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்க...
சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்ம...
சர்தார் – ப்ரின்ஸ் பிக்சர்ஸின் தரமான சம்பவம்

சர்தார் – ப்ரின்ஸ் பிக்சர்ஸின் தரமான சம்பவம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். அப்படி, தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 அன்று வெளியாகும் சர்தார் படத்தை முற்றிலும் ரசிக்கும்படியாக வழங்கவுள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வியாபாரத்தில் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. அதனால் அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. "கார்த்தியின் டபுள் ஆக்ஷன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்ஃபுல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களைக் கதையோட்டத்திற்குள் இழுத்துச் செல்லும். ஜீ.வி.பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழுத் திருப்திக்கு நான் கியாரண்டி" என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். "அழகான, தரமான என்டர்டெய்ன்மென்ட் ...
“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

இது புதிது
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்தப் பாடலின் ஹிந்திப் பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு திரு. நாகார்ஜூனாவால் வெளியாக இருக்கிறது. வெளியீட்டு விழாவினில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடலுக்கான ஐடியாவை முதன் முதலில் அவரிடம் ...
டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும்

டிமென்ஷியாவும், புத்தி க்ளினிக்கும்

இது புதிது, மருத்துவம்
உலகெங்கும், செப்டம்பர் மாதம் அல்சீமர் மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்சீமர் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க, செப்டம்பர் 21-ஐ அல்சீமர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் முதியவர்களைப் பராமரிக்கும், இந்தியத்தன்மை அதிகமுள்ள தன்னிறைவு (ஆத்மநிர்பர்) பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ மாடலை வடிவமைத்துள்ளனர் புத்தி க்ளினிக் மருத்துவர்கள். அல்சைமர் நோய் டிமென்ஷியாவுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். மற்ற காரணங்களில் வாஸ்குலர் நோய், லெவி உடல்களுடன் கூடிய டிமென்ஷியா மற்றும் ஃப்ரன்டோ-டெம்போரல் டிமென்ஷியா ஆகியவை அடங்கும். மறதி நோய் என அறியப்படும் டிமென்ஷியா என்பது நினைவகம், சிந்தனை, நடத்தை மற்றும் உணர்ச்சிகளைப் பாதிக்கும் பல்வேறு மூளைக் கோளாறுகளை விவரிக்கப் பயன்படும் சொல். டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளில் நினைவாற்றல் இழப்பு, பழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமம், மொழி மற்றும் ஆளுமைய...
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்...
கோப்ரா விமர்சனம்

கோப்ரா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் - கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு. படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து விடப்படாமல், மூவருக்குமே பிரதான பாத்திரங்கள் கொடுத்து வியக்க வைத்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஹீரோயிசப் படமென்பதால் நாயகிகளை அழுத்தமாகக் கதையில் உபயோகிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று கூட வகைமைப்படுத்தலாம். சதா சர்வகாலமும் மூளைக்...
இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இது புதிது, சமூகம்
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான ...
டைரி விமர்சனம்

டைரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டி-பிளாக், தேஜாவு போன்ற த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, ஒரு சூப்பர் நேட்சுரல் த்ரில்லரில் நடித்துள்ளார் அருள்நிதி. பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை – கொள்ளைச் சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் உதவி ஆய்வாளர் பயிற்சியில் இருக்கும் வரதன். வழக்கு சம்பந்தமாக மிகச் சிறிய துப்பு கிடைக்கும் பொழுது, அவரது கார் காணாமல் போகிறது. காரைத் திருடியவனைத் தேடும் வரதன், ஒரு பேருந்தில் ஏறுகிறார். பேருந்தில், அவர் விசாரிக்கும் வழக்கு சம்பந்தமான நகைகள் கிடைப்பதோடு, அமானுஷ்யமாகப் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்களுக்கும், பதினாறு வருடங்களுக்கு முன் நடந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை, விசாரணையில் இருந்து விலகி, பேருந்திற்குள்ளேயே சிறிது நேரம் பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி, அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் தோடர் மக்கள், மகனைப் பிரிந்...
லைகர் விமர்சனம்

லைகர் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு தேசிய சாம்பியன்ஷிப்பை வென்று, சர்வதேச போட்டிக்காக அமெரிக்கா செல்கிறான். சர்வதேச சாம்பியன்ஷிப்பை அவனால் பெற முடிந்ததா என்பதே படத்தின் கதை. ‘ஆக்ஷன் ஸ்போர்ட்’ என படத்தினை வகைப்படுத்தியுள்ளனர். முதல் அரை மணி நேரம் மட்டும் அப்படி தீயாக ஆரம்பிக்கும் படம், அதே வேகத்தில் காதல் எனும் குறுக்...
கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம்

கோப்ரா டூர் @ மதுரை | விக்ரம்

இது புதிது
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்-பிக்சன் கதையில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களைச் சந்தித்தனர். கோலகலமாக ரசிகர்களின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. நடிகை மீனாட்சி, “இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் புரமோசனை இன்று தான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதைத் துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி. ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விக்ரம் சாருக்கான் எல்லோரும் படம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்”...