Shadow

இது புதிது

கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

கேங்கர்ஸ் விமர்சனம் | Gangers review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு பள்ளிச்சிறுமி காணாமல் போக, அவ்வூரில் நடக்கும் பல குற்றங்களையும் பட்டியலிட்டு, பள்ளி ஆசிரியை ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அப்புகாரைப் புலனாய்வு செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவ்வூரிற்கு ஆசிரியரராக வரும் சரவணன், பள்ளிச்சிறுமி காணாமல் போனதன் மர்மத்தைக் கண்டுபிடிப்பதோடு, அந்த ஊரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூறு கோடியையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதற்கு அவருடன் இணையும் கேங்கர்ஸ் உதவுகின்றனர். ஆசிரியை சுஜாதாவாகக் கேத்தரின் தெரசாவும், விளையாட்டு ஆசிரியர்கள் சிங்காரமாகவும் சரவணனாகவும் வடிவேலுவும், சுந்தர்.சி-யும் நடித்துள்ளனர். பயந்த சுபாவம் உள்ளவராகப் பகவதி பெருமாளும், வடிவேலுவால் தொழில் பாதிக்கப்பட்டவாரக முனீஷ்காந்தும், முனீஷ்காந்தின் நண்பராகக் காளையனும் நடித்துள்ளனர். இவ்வைவரும் கேங்கர்ஸாகக் கூட்டு சேர்கின்றனர். இந்தக் கூட்டணி அமையும் முன், படத்தி...
டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு இளம்பெண் கடத்தப்படுகிறாள், மூன்று காவலர்களைக் காரில் செல்லும் ஒரு குழு சுட்டுக் கொல்கிறது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறார், கள்ளக்குறிச்சி பை-பாஸ் பாலத்தினருகே சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, ஓரிரவில், பத்து மணி நேரத்திற்குள் இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நேரடியாக முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று, கதையை விட்டு அகலாமல் திரைக்கதை பயணிப்பது படத்தின் மிகப் பெரிய பலம். அடுத்து என்ன என்ற பதைபதைக்க வைக்கும் ஓர் இயல்பான ஓட்டம் திரைக்கதையில் இல்லாவிடினும், சுவாரசியத்தைத் தக்கவைக்கும் அளவுக்குக் காட்சிகளைக் கச்சிதமாக அடுக்கியுள்ளனர். எல்லாக் குற்றத்தையும் இணைக்கும் கனெக்டிங் டாட்ஸை மிக நேர்த்தியாகக் கோர்த்துள்ளனர். ஆம்னி பேருந்து நடத்துநராக வரும் ம...
அம்… ஆ விமர்சனம் | Am… aa review

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி விசாரித்தற்காக ஸ்டீஃபனைத் தாக்கவும் செய்கிறார். ஸ்டீஃபன் யார், அம்மிணியம்மா யார், குயிலி யார் என்று படத்தின் இரண்டாம பாதியில் முடிச்சவிழ்க்கின்றனர். குழந்தைக்காகத் தவம் கிடக்கும் அஞ்சு என்பவரின் அறிமுகத்திற்குப் பின் கவந்தாவிற்குச் செல்கிறது படம். முதல் ப...
நாங்கள் விமர்சனம் | Naangal review

நாங்கள் விமர்சனம் | Naangal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது. மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் அகப்பட்டுச் சிக்கித் தவித்து, மகிழ்ந்து, தந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள மெனக்கெட்டு, பால்யத்தை இழந்த ஒரு வினோதமான வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தும், நடைமுறைக்கு ஒத்துவராத அம்முயற்சியைக் கைவிட்டு மீண்டும் கூடடைகின்றனர். அச்சிறுவர்களது வாழ்க்கை த...
HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

இது புதிது
இடா (IDAA) ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 ஆவது படமாக உருவாகும் #HK15 படத்தின் அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது.வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாபத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாகப் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்...
Good Bad Ugly விமர்சனம் | GBU review

Good Bad Ugly விமர்சனம் | GBU review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக். ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற AK மீண்டும் ரெட் டிராகன் ஆவதுதான் கதை. ‘அவர் யார் தெரியுமா? ரெட் டிராகன் யார் தெரியுமா? AK யார் தெரியுமா?’ என வில்லன் அர்ஜுன் தாஸைத் தவிர அத்தனை பேரும் படம் நெடுகே கேட்டு, அவரது புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ‘அசாஸின் ஜான்விக்கைக் காப்பாத்தினவர், கொரியன் டான் டோங் லீயே AK-வின் தைரியத்தைப் பா...
டெஸ்ட் | TEST review – NetFlix

டெஸ்ட் | TEST review – NetFlix

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா
விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், இறுக்கமான முகத்துடன் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரம் வாய்த்திருந்தும் அவர் சரியாக அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சின்ன கதாபாத்திரம் என்றாலும், காணாமல் போகும் தன் மகனுக்காக வெடிக்கும் பொழுது மீரா ஜாஸ்மின் தன் இருப்பினைப் பதிகிறார். எந்தப்...
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதி...
Trauma விமர்சனம் | Trauma review

Trauma விமர்சனம் | Trauma review

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும். திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் ஒரு மெடிக்கல் ஸ்காமில் (Scam) வந்து இணைவதுதான் படத்தின் முடிவு. கார் திருடர்களாக மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பங்கு முக்கியம் என்ற போதும், நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்ட அசுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மாரிமுத்த...
ராபர் விமர்சனம் | Robber review

ராபர் விமர்சனம் | Robber review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனின் கதையை, அவரது உதவியாளர் SM பாண்டி இயக்கியுள்ளார். மெட்ரோ படத்தைப் போலவே, இப்படமும் செயின் ஸ்னேட்சிங்கை மையப்படுத்திய படம். ‘திருடன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டித் துன்பறுத்தி நகையைத் திருடிச் செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு. மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை’ என படத்தின் கதாசிரியரான ஆனந்த் கிருஷ்ணன், ராபர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார். பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கப் பணம் தேவை என்கிற கருத்தாக்கத்திற்குச் செல்லும் படத்தின் எதிர் நாயகனான சத்யா, பெண்ணின் கழுத்தில் இருந்து நகையைக் கொடூரமாகப் பறிக்கத் தொடங்குகிறான். எங்கெல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லையோ, பொருத்தப்பட்டாலும் வேலை செய்யாத இடங்களாகப் பார்த்துக் கொள்ளை...
நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு அம்மா என்றால் உயிர். அம்மாவின் மரணம் அவனை என்னவாக மாற்றுகிறது என்றும், அம்மாவுடன் இணைந்து கடலிலுள்ள தேவதைகளைக் காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை. மாலிக்கின் தொழிற்போட்டியாளராக சுரேஷ் மேனனும், அம்மா ஃபாத்திமாவாக கனிகாவும் நடித்துள்ளனர். தனது பிரத்தியேகமான மாடுலேஷனில், அவர் இ...
எமகாதகி விமர்சனம்

எமகாதகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா. லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அனைவரும் சிக்கிய பின்பும், லீலாவின் மனத்தாங்கல் குறைந்தபாடில்லை. ஒரு தேர்ந்த குறுநாவலுக்கான முடிவோடு மிக அற்புதமாக முடிகிறது படம். நாயகியின் அம்மா சந்திராவாக நடித்துள்ள கீதா கைலாசம் தவிர அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனால் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘...
சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

OTT, Web Series, இது புதிது
முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு உதவுகிறாள் நந்தினி. முதல் சுழலில் எப்படி மயான கொள்ளை பின்னணியில் கதை நகர்ந்ததோ, இத்தொடரில், அஷ்ட காளி திருவிழா பின்னணியில் கதையின் ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் வரை, திருவிழாவை (குலசை தசரா) ஒட்டித் தொடரின் முக்கியமான நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர்...
சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

இது புதிது, சமூகம்
ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகள் இனி சென்னையிலும் கிடைக்கும். அதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் 'சட்டி கறி' உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வினும் காயத்ரியும், ''உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு! எங்களுடைய சட்டி  கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும் வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டைப் போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு. எங்களுடைய உணவகத்தில் தென்னிந்தியப் பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளைத் தயாரித்து வழங்குகிறோம். எங்கள...