32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

510 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 8)
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review இது புதிது

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு […]

02/07/2025 Dinesh R
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review இது புதிது

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா […]

28/06/2025 Dinesh R
மார்கன் விமர்சனம் | Maargan review இது புதிது

மார்கன் விமர்சனம் | Maargan review

‘ககன மார்க்கன்’ என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது. ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் […]

27/06/2025 Dinesh R
28 Years Later விமர்சனம் | 28 YL review அயல் சினிமா

28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர் (2008)’ படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 […]

24/06/2025 Dinesh R
Chennai City Gangsters விமர்சனம் இது புதிது

Chennai City Gangsters விமர்சனம்

பசுபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க பாண்டியும் பூச்சியும் சைக்கோ சலீமிடம் பணத்தைத் திருடி, அதை டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அந்தப் பணத்தை ஈடு செய்ய, ஸ்பிலிட் சூசை, மெமரி தாஸ், டமார லால், குடி குமார் எனும் கொள்ளையர்களுடன் இணைந்து வாவ் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த கேங்ஸ்டர்களின் முயற்சி என்னானது என்பதே படத்தின் கதை. எழுதி இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வரும், அருண் கேசவும் கதாபாத்திர வடிவமைப்பில் அசத்தியுள்ளனர். ஸ்பிலிட் சூசையாக ஆனந்த்ராஜும், மெமரி தாஸாக மொட்டை […]

20/06/2025 B R Murali Krishnan
டிஎன்ஏ விமர்சனம் | DNA review இது புதிது

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை […]

19/06/2025 Dinesh R
மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review இது புதிது

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும். கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் […]

06/06/2025 Dinesh R
தக் லைஃப் விமர்சனம் | Thug Life review இது புதிது

தக் லைஃப் விமர்சனம் | Thug Life review

காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக […]

05/06/2025 Dinesh R
ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review இது புதிது

ராஜபுத்திரன் விமர்சனம் | Rajaputhiran review

தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் […]

30/05/2025 Dinesh R
ஏஸ் விமர்சனம் | Ace review இது புதிது

ஏஸ் விமர்சனம் | Ace review

சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், […]

23/05/2025 Dinesh R
“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம இது புதிது

“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ குறித்த தகவல்களைப் பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரேம் ஆனந்த், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு […]

13/05/2025 Dinesh R
Narivettai – இயக்குநர் சேரன் நடிக்கும் முதல் மலையாளப்படம் | Tovino Thomas இது புதிது

Narivettai – இயக்குநர் சேரன் நடிக்கும் முதல் மலையாளப்படம் | Tovino Thomas

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025 அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிரம்மாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாதெமி விருது’ பெற்ற அபின் ஜோசப் இந்தப் […]

12/05/2025 Dinesh R
தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review இது புதிது

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் […]

06/05/2025 Dinesh R
ரெட்ரோ விமர்சனம் | Retro review இது புதிது

ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் […]

01/05/2025 Dinesh R
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R