32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கட்டுரை

337 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 18 / 23
செய்திகள் வரிசை (பக்கம் 18)
பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும் கட்டுரை

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு […]

09/01/2015 Dinesh R
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்.. கட்டுரை

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் […]

12/12/2014 Dinesh R
வியாசன் பறந்த வானில் கட்டுரை

வியாசன் பறந்த வானில்

தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் […]

11/11/2014 Dinesh R
இதே ஊர்தான்டா..! அரசியல்

இதே ஊர்தான்டா..!

ஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டிதான் கதையின் மைய இழை. ஆனால் அது மட்டுமே கதை அல்ல. சுவரில் வரையப்படும் படமும் அதன் மூலம் கட்சியின் பெயரும் அதிகாரமும் அங்கேயே நிலை பெற செய்ய என்னென்ன அரசியல் நடக்கிறது அதில் எளிய மக்களின் நம்பிக்கைகள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விலாவாரியாகப் பேசுகிறது மெட்ராஸ் படம். அது வெறும் சுவர் இல்ல.. அதிகாரம். காளியும் அவன் நண்பன் அன்பும் மைய கதாபாத்திரங்கள். அன்பு நடுவிலே […]

09/10/2014 Dinesh R
5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன் கட்டுரை

5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

ஐந்து வயதாகும் K.L.தீரஜ், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கிறான். தேசிய அளவில் மூன்று ரெக்கார்ட்கள் முன்னமே படைத்து, India Book of Records இல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீரஜ் தனது முதல் ரெக்கார்ட்டை, பிறந்த இரண்டு வருட ஒன்பது மாதங்களில் படைத்துள்ளான். இளவயதில் அதிக எண்ணிக்கையில் அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனின் முதல் ரெக்கார்ட். 215 தேசிய கொடிகளை, 2 நிமிடம் 15 நொடிகளில் அடையாளம் கண்டுள்ளார். தீரஜ் தனது இரண்டாவது […]

27/09/2014 Dinesh R
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை அரசியல்

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் […]

22/09/2014 Dinesh R
சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை சமூகம்

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது.. பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான […]

11/09/2014 Dinesh R
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு கட்டுரை

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை […]

18/07/2014 Dinesh R
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம் கட்டுரை

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் […]

02/07/2014 Dinesh R
“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர் அரசியல்

“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

16.06.2014 பெறுநர் உயர்திரு தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், சென்னை. ஐயா, என்னைத் தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். […]

16/06/2014 Dinesh R
எங்கே போனாய் ரெனி!? கட்டுரை

எங்கே போனாய் ரெனி!?

மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள். “அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் […]

22/05/2014 Dinesh R
லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம் கட்டுரை

லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, […]

10/04/2014 Dinesh R
நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம் அரசியல்

நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

அப்பா இறந்துவிட்டார். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல். அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை. கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் […]

03/04/2014 Dinesh R
கற்றதனாலாய பயன் கட்டுரை

கற்றதனாலாய பயன்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘திருத்தப்பட வேண்டியவர்கள்‘ என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது.  இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ […]

12/03/2014 Dinesh R
தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி. கட்டுரை

தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும் திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல்கடமையாக வைத்திருக்கிறது. இதனாலயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும் ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் […]

01/03/2014 Dinesh R