32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கட்டுரை

337 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 19 / 23
செய்திகள் வரிசை (பக்கம் 19)
என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை? கட்டுரை

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.  ‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை “சைபர் க்ரைமில்” போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. […]

26/02/2014 Dinesh R
“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன் கட்டுரை

“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.. பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் “அம்மா உணவகம்” ஆரம்பித்தபோதே நீங்கள் ஏழைகளின் இதயங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டீர்கள். இப்போது “அம்மா திரையரங்கம்” கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குநராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்போன்ற ஆயிரக்கணக்கான இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் இதயங்களில் […]

20/02/2014 Dinesh R
சீமான் செய்த துரோகம் அரசியல்

சீமான் செய்த துரோகம்

“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது.  […]

19/02/2014 Dinesh R
‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’ கட்டுரை

‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது. செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய், தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள். அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் […]

19/02/2014 Dinesh R
“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா கட்டுரை

“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

என் இனிய தமிழ்மக்களே! 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துலக தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. செங்கொடியின் வீரமரணத்திற்குப் பின் விடுதலை. இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர், இறுதியுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொணா வலியையும் வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப்போயிற்று. இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும் தமிழ்மனமும் இந்த 2014 பிப்ரவரியில் முதன்முறையாக தன்னிறைவு அடைந்தது. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் […]

19/02/2014 Dinesh R
ஏனோ தெய்வம் சதி செய்தது!? கட்டுரை

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் […]

19/02/2014 Dinesh R
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா கட்டுரை

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை […]

13/02/2014 Dinesh R
தமிழில் மோடி! புத்தகம்

தமிழில் மோடி!

குஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான திரு.நரேந்திர மோடியின் இளமைப்பருவம் முதல் அவரது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பல்துறை வளர்ச்சிகள் வரை விவரிக்கும் “நரேந்திர மோடி – நேர்மையும் நிர்வாகத் திறமையும்” என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மெளலி எழுதியிருக்கிறார். ஏராளமான அரிய புகைப்படங்களும், நேரடித் தகவல்களும் கொண்ட புத்தகத்தை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திரு.நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அந்தப் புத்தகத்தை வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. பொன் […]

11/02/2014 Dinesh R
கர்ணனின் கவசம் கட்டுரை

கர்ணனின் கவசம்

இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு. மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல். நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் […]

08/02/2014 Dinesh R
இரண்டாம் உலகம் கட்டுரை

இரண்டாம் உலகம்

பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும். கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் […]

07/02/2014 Dinesh R
அமேசான் என்கிற ஆச்சர்யம்! கட்டுரை

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். […]

29/01/2014 Dinesh R
டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும் கட்டுரை

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என […]

27/01/2014 Dinesh R
ஔரங்கசீப்பின் உயில் கட்டுரை

ஔரங்கசீப்பின் உயில்

இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு […]

27/01/2014 Dinesh R
தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை கட்டுரை

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் […]

16/01/2014 admin
முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா கட்டுரை

முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

சம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர் பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் இசைப்பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு,  “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்பட்டது. இவரது ஆரம்பக்கால இசை வாழ்க்கையாக கருதப்படும், பத்மபூஷன் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யையாக இருந்ததில் தொடங்கி, கடந்த ஆண்டு கர்நாடக இசை உலகத்தின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ பட்டம்பெற்ற வரை அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ளன.  “கடும் உழைப்பே, புகழுக்கும் வெற்றிக்கும் விலையாகும். ஒவ்வொரு நிமிட […]

06/01/2014 Dinesh R