Shadow

Tag: ஆதி

பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
நடிகர் ஆதி – இயக்குநர் அறிவழகன் இணையும் ‘சப்தம்’ திரைப்படம்

நடிகர் ஆதி – இயக்குநர் அறிவழகன் இணையும் ‘சப்தம்’ திரைப்படம்

சினிமா, திரைத் துளி
தனது முதற்பட நாயகனான ஆதியை மீண்டும் நாயகனாக்கி, “சப்தம்” எனும் புதுப்படத்தை இயக்கித் தயாரிக்கிறார் இயக்குநர் அறிவழகன். ஆல்ஃபா ஃப்ரேம்ஸ் இயக்குநர் அறிவழகனும், 7ஜி ஃப்லிம்ஸ் சிவாவும் இணைந்து தயாரிக்க, டிசம்பர் 14 அன்று எளிமையான பூஜையுடன், சப்தம் படம் இனிதே துவங்கியது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். த்ரில்லர் படங்களைத் தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்...
ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

கேலரி, சினிமா, திரைத் துளி
ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்த...
தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

சினிமா, திரைத் துளி
கதைத் தேர்வில் அதீத கவனத்துடன் இருக்கும் ஆதி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். "நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்தக் கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்குத் தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன. இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மிகச் சிறப்பான படத்தைக் கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒ...
“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

சமூகம், சினிமா
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள் பொது சேவை மையங்கள் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்டு, மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளைக் கண்டடைந்து பேராவூரணி, அறந்தாங்கி பகுதியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களைக் கொண்டு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் - தார்பாய் - சோலார் லைட்- கொசுவலை - போர்வை - மருந்துகள்-மற்றும் உணவு பொருட்களை 1-12-2018 அன்று வழங்கினர். மேலும், "அங்கு சென்று பார்த்ததில், நினைத்ததை விட மிகப் பெரிய பேரிடருக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனை தருகித்ச்து. இதிலிருந்து அம்மக்கள் மீளவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அனைவரும்...
யு டர்ன் விமர்சனம்

யு டர்ன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில்ல...
மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் 'யு-டர்ன்'. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'யு-டர்ன்' படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. "இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில...