Shadow

Tag: இயக்குநர் கே.பாக்யராஜ்

“கயிலன்: சங்க காலச் சொல்” – இயக்குநர் அருள் அஜித்

“கயிலன்: சங்க காலச் சொல்” – இயக்குநர் அருள் அஜித்

சினிமா, திரைச் செய்தி
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விறுவிறுப்பான த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இப்படம், ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் 'கயிலன்' என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன். இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்...
Trauma – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்

Trauma – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இப்படத்தை இயக்கியுள்ளர். மெடிக்கல் க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இசையப்பாளர் ராஜ் பிரதாப், “'ட்ராமா' திரைப்படம் ஒரு ஆன்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர்-லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.இயக்குநர் ராகவ் ...
“கவுண்டமணி நல்லவர் வல்லவர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்

“கவுண்டமணி நல்லவர் வல்லவர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ், “மணியைப் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். இருந்தாலும் அவரைப் பற்றி மணியான ஒரு விஷய...
பொன்மகள் வந்தாள் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது. 'அந்தக...
மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

சினிமா, திரைச் செய்தி
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, "சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன். சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில்...
கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

சினிமா
மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர்  ஜாக்குவார் தங்கம், "கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா அவர்களுக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவு செய்து நல்ல பழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்" என்றார்.  இயக்குநர் மோத்...
மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

சினிமா, திரைச் செய்தி
ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். அவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், " 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும் இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர், நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இ...
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. "ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். ...
குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

சினிமா, திரைத் துளி
ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் குடிமகன். “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் இயக்கி இருந்தார். இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.அவர் கூறியதாவது, "குடிமகன் திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், ...
இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த். இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து - இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார். நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடி...
கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூத்து என்பது வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரைக் கூத்தன் என்றழைப்பார்கள். கலைகளின் தோற்றுவாய் எனக் கருதப்படும் சிவனுக்கும் அப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நடிப்பிலும் நடனத்திலும் பேராவலுள்ள நாயகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயகன் வசிக்கும் ஃப்லிம் நகரில், சினிமா கனவுகளோடு 35 குடும்பங்கள் வாழ்கின்றன. அதன் உரிமையாளர் அந்த நகரை விற்க முற்படுவதால், ஃப்லிம் நகர்வாசிகள் அவ்விடத்தை வாங்க முயற்சி செய்கின்றனர். நாயகிகளின் நாட்டியப் பள்ளி வளாகம் கடனில் மூழ்கியுள்ளது. அதை மீட்கப் போராடுகின்றனர். இவர்கள் எப்படி இந்தக் கஷ்ட சூழலைச் சமாளித்து தங்கள் சிக்கல்களைத் தீர்க்கின்றனரே என்பதே படத்தின் கதை. நடனத்தை மையப்படுத்திய படம். அதனாலேயே, பிரபுதேவவின் தம்பி நாகேந்திர பிரசாத்தை வில்லனாகப் போட்டுள்...
அர்ஜுனா – இரு மொழிகளில்

அர்ஜுனா – இரு மொழிகளில்

சினிமா, திரைத் துளி
'ஸ்பைசி க்ளெட் என்டர்மெயின்ட்ஸ்' சார்பில் K.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் அர்ஜுனா. இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். M.A.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்புப் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார். இந்தப் படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்துத் துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது....
கூத்தன் – இசை வெளியீட்டு விழா

கூத்தன் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் "கூத்தன்". இப்படத்தில், அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனல், கிரா, ஆகியோர் நடித்தள்ளனர். இவர்களுடன், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா,கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலகப்பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது. தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, "உலகில் முதலில் வந்தது கூத்துதான். கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில்நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ்இந்தப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிக...
ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்திரன...
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந...