Shadow

Tag: இயக்குநர் பாரதிராஜா

“இளையராஜா நம் நாட்டின் அதிசயம்” – இயக்குநர் பாரதிராஜா

“இளையராஜா நம் நாட்டின் அதிசயம்” – இயக்குநர் பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் பாரதிராஜா, “உலக அதியசங்கள் என எதை எதையோ சொல்கிறோம். ஆனால் இளையராஜா நம் நாட்டின் அதிசயம். நான் சிறு வயதிலிருந்து அவனுடன் பழகி வருகிறேன். ஆனால் அவனது திறமை, இ...
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா
என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, இப்பொழுது புறவயமான அம்சமாகவே பெரும்பாலும் மாறிவிட்டது. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ படம். போகியுடன் ‘சிச்சுவேஷன்ஷிப் (Situationship)’-இல் இருக்கும் சாம் எனும் பெண், கே எனும் ஆணுடன் சிச்சுவேஷன்ஷிப்பில் இணைகிறார். பார்க்கும் கணத்தில், கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல்...
எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

இது புதிது
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த 'அயலி' என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம். இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியானது. தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது 'எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் (Estrella stories)’ நிறுவனத்தின் சார்பில் ...
“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜும், ரைட்டர் படம் பார்த்த பிறகு இயக்குநர் பிராங்ளினை வெகுவாகப் பாராட்டினார். “தமிழ் சினிமாவில், ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்குப் ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குநர்களை இந்தத் தமிழ் சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும்” என்றார்...
மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

சினிமா, திரைச் செய்தி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிஞர் வெண்ணிலா பேசும்போது, "எனது நண்பன் இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவைச் சந்திப்பதற்க...
படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...
குரங்கு பொம்மை விமர்சனம்

குரங்கு பொம்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு 'குரங்கு பொம்மை' படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்...
குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை'க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா. வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் 'கூட்டாஞ்சோறு'. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை "குற்றப்பரம்பரை" எனப் பெயர் மாற்றி 'டிஸ்கவரி புக் பேலஸ்' எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார். அந்நிலையில், "பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்" என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த இய...