ரகு தாத்தா விமர்சனம்
ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா இல்லையா என்பதே கதை.
நல்ல பகடியான தலைப்பு. 'இன்று போய் நாளை வா (1981)' எனும் இயக்குநர் கே. பாக்யராஜின் படத்தில் வரும் ஒரு வசனத்தைத் தலைப்பாக உபயோகித்துள்ளனர். விருப்பமின்றி ஹிந்தி கற்கும் ஒருவரின் மனோநிலையைச் சுட்டுவதற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்...