காஃப்காவினால் அல்ல!
ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள்.
இவர் எழுதிய 'The Metamorphosis's (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை.
காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் 'தங்க ஒரு....' எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்" எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து 'லில்லிபுட்' என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சி...