
எமகாதகி விமர்சனம்
நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா.
லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அனைவரும் சிக்கிய பின்பும், லீலாவின் மனத்தாங்கல் குறைந்தபாடில்லை. ஒரு தேர்ந்த குறுநாவலுக்கான முடிவோடு மிக அற்புதமாக முடிகிறது படம்.
நாயகியின் அம்மா சந்திராவாக நடித்துள்ள கீதா கைலாசம் தவிர அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனால் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘...