Shadow

Tag: சதீஷ்வரன்

ஆக்காட்டி திரைப்படம் – Best Film Recognition Award | IFFI 2025

ஆக்காட்டி திரைப்படம் – Best Film Recognition Award | IFFI 2025

சினிமா, திரைத் துளி
WAVES Film Bazaar பிரிவின் கீழ், 56 ஆவது சர்வதேச கோவா திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகார விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணை தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றனர். தென் தமிழகக் கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குநர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்படத் திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்...
மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா ...
Tata Harrier EV | Off roading இல் மாஸ் மஹாராஜா

Tata Harrier EV | Off roading இல் மாஸ் மஹாராஜா

சமூகம்
டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV ஆகும். சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கார் வாங்கப் பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடெமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் ட...
நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்க,...
நேற்று இந்த நேரம் | காணாமல் போன நண்பர்களும், திடுக்கிடும் சம்பவங்களும்

நேற்று இந்த நேரம் | காணாமல் போன நண்பர்களும், திடுக்கிடும் சம்பவங்களும்

சினிமா, திரைத் துளி
கிளாப்இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி இயக்கி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்" ஆகும். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். க்ரைம் திரில்லர் பாணியில் சுவாரசியமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின்.N இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர். ...