Shadow

Tag: சரண்யா பொன்வண்ணன்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம்...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர...
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா,  ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, இவர்களோடு ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கு...
“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகை இந்திரஜா, “இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்துதான் நான் 2 ஆவது மொட்டை அடித்தேன். என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி” என்றார். நடிகை சரண்யா, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்ச...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்...
ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார். ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட 'சினிமா பாரடைஸ்' எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157...
டானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்

டானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்

சினிமா, திரைச் செய்தி
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, “நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, 'இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா?' என என்னிடம் கேட்பார். அப்போது, ‘உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்துக் கர்வப்பட்டுக் கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார...