Shadow

Tag: சாண்டி

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு அம்மா என்றால் உயிர். அம்மாவின் மரணம் அவனை என்னவாக மாற்றுகிறது என்றும், அம்மாவுடன் இணைந்து கடலிலுள்ள தேவதைகளைக் காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை. மாலிக்கின் தொழிற்போட்டியாளராக சுரேஷ் மேனனும், அம்மா ஃபாத்திமாவாக கனிகாவும் நடித்துள்ளனர். தனது பிரத்தியேகமான மாடுலேஷனில், அவர் இ...
“பாரதிராஜாவும் வடிவுக்கரசியும்” – நடிகர் நட்டி | நிறம் மாறும் உலகில்

“பாரதிராஜாவும் வடிவுக்கரசியும்” – நடிகர் நட்டி | நிறம் மாறும் உலகில்

சினிமா, திரைச் செய்தி
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் சாண்டி மாஸ்டர், ''இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பைப் பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்புப் பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன வ...
நிறம் மாறும் உலகில் – உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் படம்

நிறம் மாறும் உலகில் – உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் படம்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகப் படக்குழுவினர் பிரத்தியேக அசைவொளியை உற்சாகத்துடன் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் ந...
பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

சினிமா, திரைச் செய்தி
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேச...
Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவனை...
3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

சினிமா, திரைத் துளி
பேம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் (Bamboo Trees Productions) சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தைத் தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் (நேரம்) கதையின் வில்லனாக இருக்கும் கதையில், நேரத்தை மையமாகக் கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் நாயகனைப் பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் நாயகன் எப்படித் தப்பிக்கிறான் என்பது தான் கதை. படத்தின் ...
பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ்
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும். லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்றி...
பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ்
காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. 'ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும். பிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார். சேரன் - ஊர் நாட்டாமை மீரா - மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய் தர்ஷன் - அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்...
‘அறிவே பலம்’ – பலசாலி

‘அறிவே பலம்’ – பலசாலி

சினிமா, திரைத் துளி
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி படப் பாணியில் முழுக்க முழுக்கக் காமெடியாக சொல்லும் படம் தான் பலசாலி. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படித் தன்னை விட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் 'பலசாலி'. சூது கவ்வும் பாணியிலான ‘ப்ளாக் ஹ்யூமர்’ படமாக உருவாகிறது 'பலசாலி'. பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவைப் பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால், பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனை விட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்...