Shadow

Tag: டைமண்ட் பாபு

60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட்ட...
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் ...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின்...
சதுரம் 2 விமர்சனம்

சதுரம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைக்காலஜிக்கல் த்ரில்லர்களான ‘சா (SAW)’ தொடர் படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தின் கருவை எடுத்தாண்டு, பிளான்த்ராஃபிக்கல் த்ரில்லர் (Philanthropical thriller) என்ற வகைமைக்கு சதுரம் 2 படத்தை மாற்றி உருவாக்கிள்ளனர். சதுர வடிவிலான அறையில் மருத்துவர் வாசுதேவனும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு, அவ்விருவராலும் சதுரத்தில் இருந்து வெளியேற முடிகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஸ்லாஷர் (slasher) வகை படங்கள், தமிழுக்குத் தேவையா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது ரத்தக் களறியுடன் ஒருவரைக் கொடூரமாக அறுத்து கொலை செய்யப்படுவதாகச் சித்தரிக்கும் படங்களை ஸ்லாஷர் படங்கள் எனலாம். ஆனால், பெரும்பாலான ஹீரோயிசம் மிகுந்த (மலிந்த) மாஸ் படங்கள் கிட்டத்தட்ட ஸ்லாஷர் படங்கள் போன்றே காட்சியளிக்கின்றன. இப்படமோ மிக லாவகமாக சென்சா...