Shadow

Tag: டைமண்ட் பாபு

இடி மின்னல் காதல் விமர்சனம்

இடி மின்னல் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹரனும் ஜனனியும் காதலிக்கின்றனர்; காரில் செல்லும் பொழுது, ரித்தீஷ் ஜெயினை மோதிவிடுகின்றனர். ரித்தீஷ் ஜெயினின் மகன் அபிஷேக் ஜெயினிற்கு ஆதரவாக அப்பகுதியில் வசிக்கும் விபச்சாரி துணை நிற்கிறாள். ரித்தீஷ் வாங்கிய கடனிற்காக அபிஷேக்கைக் கவர நினைக்கிறான் வல்லநாட்டு அருள்பாண்டியன். இவர்தான் இடி; அபிஷேக்தான் மின்னல்; ஹரனும் ஜனனியும்தான் காதல். இடைவேளையில், மூன்று திரைச்சட்டகங்களாகப் பிரித்துப் படத்தின் தலைப்பைப் போடுகிறார்கள். மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்த படம் என்று படக்குழு சொல்லியிருந்தனர். அபிஷேக்கிற்கு, 'இருமன ஒழுங்கின்மை (Bipolar Disorder)' இருப்பதாக நாயகன் கண்டுபிடிக்கிறார். நாயகன் சைக்காலஜி படித்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவ்வுழுங்கின்மை வாய்க்கப்பெற்றால் மனம் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளின் எல்லைக்கு ஊஞ்சல் போல் (swing) போய் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில காட்சிகளில் அபிஷேக்கின் கண்...
இடி மின்னல் காதல் – மனநலம் பற்றிப் பேசும் படம்

இடி மின்னல் காதல் – மனநலம் பற்றிப் பேசும் படம்

சினிமா, திரைச் செய்தி
பாவகி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலாஜி மாதவன், “பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டென்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பி...
“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்...
“இது, பாரத் ரத்னா இளையராஜாவின் படம்” – கமல் ஹாசன்

“இது, பாரத் ரத்னா இளையராஜாவின் படம்” – கமல் ஹாசன்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். நடிகர் கமல்ஹாசன், “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதே எனக்குப் புரியவில்லை. இது மிக நீண்ட ஒரு பயணம். எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப் பெரியது. இவர் தான் இளையர...
“இளையராஜா நம் நாட்டின் அதிசயம்” – இயக்குநர் பாரதிராஜா

“இளையராஜா நம் நாட்டின் அதிசயம்” – இயக்குநர் பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் பாரதிராஜா, “உலக அதியசங்கள் என எதை எதையோ சொல்கிறோம். ஆனால் இளையராஜா நம் நாட்டின் அதிசயம். நான் சிறு வயதிலிருந்து அவனுடன் பழகி வருகிறேன். ஆனால் அவனது திறமை,...
காப்பான் விமர்சனம்

காப்பான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் காப்பவராகவும் சூர்யா நடித்துள்ளார், வெற்றிகரமாக கே.வி.ஆனந்துடன் இணைந்து ஒரு ட்ரைலஜியை நிறைவு செய்துள்ளார் சூர்யா. கே.வி.ஆனந்த் படங்களில் நிலவும் ஒரு பிரச்சனை – படத்தின் நீளம். இங்கு சினிமா செய்திகளை ரசிகர்கள் தேடித் தேடிச் சேகரிக்கின்றனர். சூர்யா, SPG-ஐச் ச...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்...
விக்ரம் பிரபுவின் அசுரகுரு

விக்ரம் பிரபுவின் அசுரகுரு

சினிமா, திரைத் துளி
திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு'. இயக்குநர் ராஜ்தீப் அவர்களுக்குத் தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம், 'மக்களை நான் காப்பாற்றுவேன்'. இந்த வசனத்திற்கேற்றாற்போல் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. நடிகர்கள்: >> விக்ரம் பிரபு >> மகிமா நம்பியார் >> மனோபாலா >> யோகி பாபு >> ஜெகன் >> ராமதாஸ் >> சுப்புராஜ் >> நாகிநீடு >> குமரவேல் பணிக்குழு: >> இ...
ஏகாந்தம் விமர்சனம்

ஏகாந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னையில் பணி புரிபவர் விவாந்த். கிராமத்தில் இருக்கும் தனது மாமன் மகளைக் காதலித்து வருகிறார். அத்தை மகன் மீது உயிரையே வைத்துள்ளார் நீரஜா. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், திடீரென நின்று விடுகிறது. அக்கல்யாணம் ஏன் எதற்காக நின்றது என்றும், அது குடும்பங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கதை நீள்கிறது. கிராமத்துப் பண்பாட்டிற்கும், நகரத்து நாகரீகத்துக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சொல்ல முயற்சி செய்கிறது படம். கதைக்குள் செல்லாமல், முதல் பாதியில் படம் ஏற்படுத்தும் சலிப்பு ஏகத்துக்கும் நெளிய வைக்கிறது. முன்னோர்கள் நமக்களித்த சிலம்பம், சித்த மருத்துவம் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறதும் அவற்றைக் காக்கவேண்டியது நம் பொறுப்பு என வலியுறுத்தும் காட்சிகளுக்குப் பிரத்தியக கவனமும் முக்கியத்துவமும் அளித்துள்ளார் இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம். மனோபாலாவின் உதவியாளரான இவர், ஜெயா டீ...
மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

சினிமா, திரைத் துளி
"சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே இந்தத் ‘துப்பாக்கி முனை’ கதையின் சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம்” என்று இயக்குநர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இ...
60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட...