Shadow

Tag: தனஞ்செயன்

”தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம்.” – கேபிள் சங்கர்

”தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம்.” – கேபிள் சங்கர்

சினிமா, திரைச் செய்தி
ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா” ஆகும். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் விநாயக் துரை, "வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன்,...
“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இருவரும் 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் தலைவாசல் விஜய், "இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தைத் தனது மனவலிமையா...
“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

இது புதிது
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனிதான். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரி...
விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ...
கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

சினிமா, திரைச் செய்தி
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K. குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொலை’ ஆகும். “லைலாவைக் கொன்றது யார்?” எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங் ஆகி வருகிறது. ‘கொலை’ படத்தில் இடம் பெறும் சம்பவம் குறித்து பரவும் இந்தச் செய்தி திரைப்பட ஆர்வம் இல்லாப் பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. வித்தியாசமான இந்த மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் பேசிய தனஞ்செயன், “இந்தப் படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார்தான். இயக்குநர் பாலாஜி மிகவும் திறமையான நபர். அவருக்கு பல...
தி கிரிமினல் – சஸ்பென்ஸ் த்ரில்லர்

தி கிரிமினல் – சஸ்பென்ஸ் த்ரில்லர்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கெளடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோடு, படத்தைப் பார்க்க...
‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி, BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்”. உண்மையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாகக் கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் T. சிவா, “தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கெனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில் மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் ...
கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சினிமா, திரைத் துளி
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் நடித்து வரும் அனைவருமே தங்கள் முழுத் திறமையையும் கொட்டி தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளார்கள். இக்கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நல்ல உடற்கட்டுடன், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். படக்குழுவுடன் இணைந்து பலரை மனதில் கொண்ட...
எதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்

எதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்

சினிமா, திரைச் செய்தி
தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் "எதிர்வினையாற்று". இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸும் இளமைதாஸும். நாயகனான அலெக்ஸே படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். விழாவில் பேசிய அலெக்ஸ், "இந்தப் படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்குச் சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு உண்டு. முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒரு படத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப் படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம். அதற்குக் காரணம் என் டைரக்...
உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தரவு மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரவியின் காதுக்குள், 'நிற்காமல் ஓடிக்கொண்டே இரு'க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை.  படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ர...
மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

சினிமா, திரைத் துளி
எந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ''படத்தின் எல்லாக் கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாட...