Shadow

Tag: திரை விமர்சனம்

அக்காலி விமர்சனம்

அக்காலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.9...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோக...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி ...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர...
Broken Script விமர்சனம்

Broken Script விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் தமிழ் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டு  நபர். இவர் ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.  தானே தயாரிக்கவும் தயாராக இருக்கிறார். இவரை நெருங்கும் ஒருவர் நான் தமிழில் உங்களுக்கு ஒரு படம் இயக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்ல, படப்பிடிப்பும் துவங்குகிறது. படம் பாதிக்கு மேல் முடிவடைந்த பின்னர் தான் ஜியோவானி சன்ஜித் சிங் ஒரு விசயத்தை உணர்கிறார்.  அவர்கள் எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு ஹாலிவுட் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று. உடனே அந்த இயக்குநரை அடித்து விரட்டிவிட்டு, படத்தை அப்படியே கிடப்பில் போடுகிறார். சில வருடங்கள் செல்கின்றது. அந்தப் படத்தை அப்படியே போட மனமில்லாமல் எடுத்த படத்துணுக்குகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரே புதிதாக கதை எழுதி இயக்கத் துவங்குகிறார்.  இத்தனைக்கும் அவருக்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கூட முழுதாகத் தெரியாது...
வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய இணைக்கு குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் கூட, இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.இவை படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்த முதல் பத்தியை படிக்கும் போதே அடுத்த என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பீர்கள்.  படத்தின்...