கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி.
அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை.
தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நை...