Shadow

Tag: மு.ஜெகன் கவிராஜ்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

Once Upon A Time In Madras – Hyperlink த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) ஆகும். இப்படம் ஹைபர் லூப் வகைமையைச் சார்ந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் கண்ணன், "படத்தில் எனக்கும் இயக்குநருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தன. எனக்கு சரியெனப்படுவது அவருக்கு தப்பு; அவருக்குத் தப்புன்னுபடுறது எனக்கு சரியா இருக்கும். இப்படியும் ஒன்னு எடுத்துக்கோங்க எனச் சொல்லி அவர்...
Once Upon A Time In Madras | இயக்குநர் பிரசாத் முருகன்

Once Upon A Time In Madras | இயக்குநர் பிரசாத் முருகன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இப்படம் ஹைப்பர் லூப் வகையைச் சார்ந்த த்ரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோருடன் திருநங்கை தீக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிரசாத் முருகன், “மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் நாயகன், சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன...
மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் ச...
எழுதப்படாத முகங்கள் |  மு.ஜெகன் கவிராஜ்

எழுதப்படாத முகங்கள் | மு.ஜெகன் கவிராஜ்

இது புதிது, புத்தகம்
நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருப்போம். அதில் பெரும்பாலான முகங்கள் நம் நினைவில் இருந்து அகன்றிருக்கும். வெகு சில முகங்கள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருக்கிற ஒவ்வொரு முகங்களின் பின்னாலும் ஏதோவொரு சுவையுடன் கூடிய வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமின்றி அந்த முகங்களில் சில நம் வாழ்க்கையின் மீளாப் பக்கங்களை தீராத் துயரத்துடன் எழுதி இருக்கக்கூடும். துவண்டு கிடந்த நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கக் கூடும், வாய்ப்பற்று வறண்டு கிடந்த நம் வாழ்வை வளமாக்கியிருக்கக் கூடும்,  தோழமையுடன் நம் தோள் தொட்டிருக்கக் கூடும், நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கக் கூடும்.  இப்படி ஏதோவொரு சிறு துரும்பையாவது நம் வாழ்வில் நிகழ்த்தியிருந்தால் மட்டுமே அந்த முகங்கள் நம் நினைவில் இருக்கும். ஆனால் 'எழுதப்படாத முகங்கள்' புத்தகத்தின் ஆசிரியர் மு.ஜெகன...