Shadow

Tag: யுவராஜ்

சலார் – ட்ரெய்லர்

சலார் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
 ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த ட்ரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர். பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் ‘சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் ட்ரெய்லர் முழுக்க முழுக்க த்ரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த ட்ரெய்லர், உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிற...
டங்கி | அன்பானவர்களை விட்டுத் தொலைவில் இருப்பதன் வலி

டங்கி | அன்பானவர்களை விட்டுத் தொலைவில் இருப்பதன் வலி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
டங்கி டிராப் 2, ‘லுட் புட் கயா‘ பாடலைத் தொடர்ந்து, சோனு நிகாமின் அடுத்த டிராக்கிற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. மியூசிக்கல் மேஸ்ட்ரோ ப்ரீதமால் வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிசைப் பாடல், முதலில் படத்தின் டங்கி டிராப் 1 வீடியோவில் அறிமுகமானது. அப்போதிலிருந்தே ஷாருக்கான் மற்றும் சோனு நிகாமின் கூட்டணியில் பார்வையாளர்கள் அப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அழகான மெலோடிகளை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கியதற்காக அறியப்பட்ட இந்தக் கூட்டணி, இந்த அற்புதமான "நிகில் தி கபி ஹம் கர் சே” எனும் அழகான டிராக்கில் தங்கள் மாயாஜால எனர்ஜியை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட டங்கி டிராப் 3, இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதையை வெளிநாட்டுக்குச் செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்ச்சரான பயணத்தை விவரிக்கிறத...
டங்கி | ஷாருக்கான் ரசிகர்களின் அன்புப்பயணம்

டங்கி | ஷாருக்கான் ரசிகர்களின் அன்புப்பயணம்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK ரசிகர்கள் இந்த டிசம்பரில் டங்கியைப் பார்க்க இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். திரைப்படத்தின் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தூண்டும் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியுள்ளது டங்கி. இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து SRK திரைப்படத்தை இந்தியத் திரையரங்கில் அனுபவிப்பதன், தனித்துவமான மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் ஏங்குகிறார்கள். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகிற இந்த ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்திற்காக, உலகளாவிய கொண்டாட்டத்தை உருவாக்க உள்ளனர். ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள், ஷாரு எனும் நட்சத்திரத்தை உயிராகக் கொண்டாடுவதற்கும், அவரது படங்களைப் புதுமையான வழிகளில் விளம்பரப்படுத்துவதற்கும் பெயர்...
“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கும் வருகை தந்திருந்தனர். தயாரிப்பாளர் பூஷன் குமார், “இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றித் தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படத்திற்காக ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமைய...
“தி வில்லேஜ் | மக்கள் விரும்பும் திகில் தொடராக இருக்கும்” – ஆர்யா

“தி வில்லேஜ் | மக்கள் விரும்பும் திகில் தொடராக இருக்கும்” – ஆர்யா

OTT, Web Series
ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் திகில் தொடரான 'தி வில்லேஜ்' எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர், அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்குப் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சி செய்யும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தைக் கண்டறியும்...
‘டங்கி’ ராஜ்குமார் ஹிரானி

‘டங்கி’ ராஜ்குமார் ஹிரானி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி - திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவைத் தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார். 'சஞ்சு,' 'பிகே,' '3 இடியட்ஸ்' போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய 'முன்னா பாய்' என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் சினிமா ரத்தினங்களைத் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடன் அவர் முதல் முறையாக இணைந்திருக்கும் 'டங்கி' மூலம், மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார். ரசிகர்கள் நகைச்சுவை கலந்த மனம் மயக்கும் ஓர் இனிதான பயணத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். உணர்ச்சிபூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, ...
டங்கி டிராப் 1 – ஐந்து நண்பர்கள்

டங்கி டிராப் 1 – ஐந்து நண்பர்கள்

Movie Posters, கேலரி, சினிமா
உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘டங்கி டிராப் 1’, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களைத் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் ‘டங்கி’ படத்தின் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக் காட்டுகிறது. இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி...
டங்கி டிராப் 1 – மனதை வருடும் 4 நண்பர்களின் கதை

டங்கி டிராப் 1 – மனதை வருடும் 4 நண்பர்களின் கதை

சினிமா, திரைத் துளி
‘டங்கி டிராப் 1’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்துத் தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதயம் வருடும் ஓர் அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்ட்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஓர் அழகான படைப்பாக இருக்கும். சோனு நிகாமின் மாயாஜால குரல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் படக்குழுவினருடன் இணைந்த SRK வின் மயக்கும் வசீகரம், என இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நட்பு, நகைச்சுவை, சிரிப்பு ஒரு துளி கண்ணீர் என அனைத்து உணர்வுகளாலும் நம்மை மூழ்கடிப்பதாக உள்ளது. இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்...
பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான்

பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான்

சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது.சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான "பியாண்ட் தி க்ளவுட்ஸ்", படத்திலேயே மிகக் கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா. ரஞ்சித்துடன் இணைந்து பணிபு...
ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’

ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’

சினிமா, திரைத் துளி
அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும், மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ குழுவில், 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் இணைந்திருக்கிறார். அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காகக் கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார். 94 ஆவது அகாடமி விருதுகளில், ஆர்ஆர்ஆர் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு..' என்ற மறக்க முடியாத பாடலுக்கா...
ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’

ஷாருக்கானின் ‘டங்கி டிராப் 1’

சினிமா, திரைத் துளி
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார். தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான ‘டங்கி’ மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். இரண்டு மிகப் பெரும் திரைக்கலைஞர்களான ஷாருக் கான் மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணைகின்றனர். நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1’ ட்ரெய்லர், ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது. இது, இதயம் வருடும் ஓர் அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களில...
“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான்

“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் தங்கலான். இப்படத்தின் இசையை இண்டியன் ட்ரைபலையும் இன்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம். அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள். தங்கலான் ஒரு கோல்டன் டீம், எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டைத் தந்துள்ளார்கள். விக்ரம்...