Shadow

Tag: யுவராஜ்

எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்

எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. படத்தொகுப்பாளர் R.K. செல்வா, “என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாகப் பேசும் படம். அதனால் டீசரில் அதைக் காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா. ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் ...
“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப் படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப் பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலா...
விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, “சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம். மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா. ரஞ்சித்தும் விக்ரம் சாரைச் சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார். அந்தத் தேதிகள் தள்ளிப் போனபோது கூட அதே கெட...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
அடியே விமர்சனம்

அடியே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை. கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அதாவ...
மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...
ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர். 'ஜவான் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகச் சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு வியப்பளிக்கும் வகையிலான சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, உற்சாகமூட்டும் பைக் காட்சிகள், இதயத்தைத் தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள் என பல வகையான ச...
“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தth திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இப்படத்தினைத் தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என்.வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்...
LGM விமர்சனம்

LGM விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை. இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதே உண்மை. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கெளதம், மீராவிற்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் செட் ஆகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நவீனகால யுக்தியான 2 வருடம் பழகிப் பார்க்கும் கான்செப்டை கையில் எடுக்கிறார்கள். ஒரு வழியாக இருவருக்கும் ஒத்துப் போக...
“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ த்ரில்லர் படம் “போர்(த்) தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் அசோக் செல்வன், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தைத் தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக் காட்டினோம். யாராவது ட்விஸ்ட்டை உடைத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட ட்விஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோருக்க...
விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

சினிமா, திரைத் துளி
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியைச் சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாப் படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணி...
தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர்

தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ்த் தயாரிப்பு 'எல் ஜி எம் ( Lets Get Married)’. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி,...
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும். நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார்....
திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு

திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு

சினிமா, திரைத் துளி
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்தியேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய் - அதுல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும...