Shadow

Tag: யுவராஜ்

சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சமூகம்
நாளை நடைபெறும், இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி. பங்குபெறும் ஆறு அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிஇன் உரிமையாளர்கள், கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் ஆகும்.  ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. . சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவி...
மாயன் – ஸ்டைலிஷான சிவன்

மாயன் – ஸ்டைலிஷான சிவன்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம் 'மாயன்'. டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரைப் பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பத...
லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

சினிமா, திரைத் துளி
தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசைப் பயணத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களைக் கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமீபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார். உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராகக் கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் "The Troubadour " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகழ்பெற்ற அரங்கு1954இல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் (The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாச...
மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

சினிமா, திரைத் துளி
ஸ்டூடியோ க்ரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தைத் தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். சண்டைப் பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “க்ரைம் த்ரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வக...
செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்?

செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்?

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் “செய்”. இந்தப் படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகன் நகுல் பேசுகையில், “இந்தப் படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்தப் படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்ப...
’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

சினிமா, திரைச் செய்தி
'96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், "இந்தக் கதை என்னுடையது தான். இந்தக் கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில், '96 என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்குப் பிறகு தயாரிப்பாள...
நோட்டா விமர்சனம்

நோட்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சமகால அரசியல் பகடியும், ரெளடி முதல்வராக வரும் விஜய் தேவரகொண்டாவும் தான் படத்தின் பலம். விஜய் தேவரகொண்டாவைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடிகிறது. படம் அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்றாலும் அவரைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் தராதது ஏன் எனத் தெரியவில்லை? படம் அடுத்த...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

மருத்துவம்
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிற...
சாமி² விமர்சனம்

சாமி² விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும். சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுமையான வில்லன். உடற்பல பராக்கிரமத்தை மட்டும் நம்பும் வெற்றுக் கூச்சலில்லாதவர் பெருமாள் பிச்சை. அவருக்கு மாற்றாக 'பிச்சை க்யூப்' என மூன்று வில்லன்களை இறக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இளைய மகன் ராவணப் பிச்சையாக பாபி சிம்ஹா; மூத்த மகன் மகேந்திரப் பிச்சையாக ஓ.ஏ.கே.சுந்தர்; இடையில், தெய்வேந்திர...
ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ட...
“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

சினிமா
வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் - ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது. இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம் குறும்படத்திற்காகச் சாரங் தியாகு ரூபாய் 1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் மயிர் குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூபாய் 25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின...