Shadow

Tag: யுவராஜ்

கோப்ரா டூர் @ திருச்சி | விக்ரம்

கோப்ரா டூர் @ திருச்சி | விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இந்நிழ்வினில் பேசிய நடிகை மீனாட்சி, "விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பைத் தருவார். நாமெல்லாம் சில ...
தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

OTT, Web Series, திரைத் துளி
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்தியேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹ்ரித்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் கல...
எமோஜி விமர்சனம்

எமோஜி விமர்சனம்

OTT, Web Series, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் 'எமோஜி' எனத் தலைப்பிட்டுள்ளனர். எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை. பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை. நாயகனின் நண்பனாக VJ ஆஷிக் நடித்துள்ளார். நடப்பனவற்றை எல்லாம் ராப் பாடல்களாக மாற்றும் ராப்பராக நிறைய பாடுகிறார். சனத் பரத்வாஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னண...
காட்டேரி விமர்சனம்

காட்டேரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருவிழாவில் கலந்து கொள்ளும் கிராமத்தினர் அனைவரையும் யாரோ ஒருவர் மின்கம்பத்தை அறுத்துக் கொள்வதில் படம் தொடங்குகிறது. நிகழ்காலத்தில், காமினி எனும் இளம்பெண்ணைப் பணத்திற்காகக் கிரணின் குழு கடத்த, அவள் புதையல் இருக்கும் கிராமத்தைப் பற்றிச் சொல்ல, காமினியுடன் அந்தக் குழு அந்தக் கிராமத்திற்குப் புறப்படுகின்றனர். அந்த பேய்க் கிராமத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் குழுவிற்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகளே படத்தின் கதை. புதையலைத் தேடி ஏழு பேர் குழு புறப்படுகிறது. கிரணாக வைபவ், வைபவின் மனைவி ஸ்வேதாவாக சோனம் பஜ்வா, காமினியாக ஆத்மிகா, கலி உருண்டையாக ரவி மரியா, கஜாவாக கருணாகரன், சங்கராக குட்டி கோபி, மற்றும் இவர்களுடன் ஒரு போலீஸ் அதிகாரி. அந்தக் கிராமம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற பேயாகத் திரியும் மாத்தம்மா நினைத்தால்தான் முடியுமெனத் தெரிய வருகிறது. குழு, மாத்தம்மாவ...
சீதா ராமம் விமர்சனம்

சீதா ராமம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் - சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் தொடங்குகிறது. கூடவே, ராம் தன் காதலிக்கு எழுதிய கடிதம் எப்படி பாகிஸ்தானின் பிரிகேடியருக்குக் கிடைத்தது என்ற சஸ்பென்ஸைக் கடைசி வரை தக்க வைத்துள்ளனர். எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னை அசால்ட்டாகப் பொருத்திக் கொள்ளும் மராத்தி நடிகரான சச்சின் கடேகர், பிரிகேடியர் தாரிக் பாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வடிவம...
பொய்க்கால் குதிரை விமர்சனம்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், வேறு எவராலேயே அச்சிறுமி கடத்தப்பட, பழி கதிரவன் மேல் விழுகிறது. இரண்டு சிறுமிகளும் கதியும் என்னானது, கதிரவன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எடு...
குலுகுலு விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, கடத...
சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பட...
யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து 'யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா, ''திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ...
பொய்க்கால் குதிரை – ஒற்றைக் காலில் நடனமாடிய பிரபுதேவா

பொய்க்கால் குதிரை – ஒற்றைக் காலில் நடனமாடிய பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமான், ...
பொய்க்கால் குதிரை – ஆக்ஷன் த்ரில்லர்

பொய்க்கால் குதிரை – ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்க்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமான்...
ஸ்ருதிஹாசன் – சினிமாவில் 13 ஆண்டுகள்

ஸ்ருதிஹாசன் – சினிமாவில் 13 ஆண்டுகள்

சினிமா, திரைத் துளி
நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாகப் பிறந்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக 'லக்' எனும் ஹிந்தித் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர், திரையுலகில் பணியாற்றத் தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். இதற்காகத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு...
நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்டண்...
மஹாவீர்யர் விமர்சனம்

மஹாவீர்யர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி. பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்து...