Shadow

Tag: ரவி மரியா

கவுண்டமணி – யோகி பாபு கூட்டணியில் “ஒத்த ஓட்டு முத்தையா”

கவுண்டமணி – யோகி பாபு கூட்டணியில் “ஒத்த ஓட்டு முத்தையா”

சினிமா, திரைச் செய்தி
Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் "ஒத்த ஓட்டு முத்தையா" திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது..கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார்கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது..கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்...
வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் நாயகன், அவன் கல்லாவில் தனக்கும் பங்கு வேண்டும் என்று போட்டிக்கு வரும் அந்த ஊர் தாசில்தார், இவர்கள் இருவருக்கும் இடையில் பகை வளர, இறுதியில் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோயிலின் நிலை என்ன ஆனது, மக்களின் நம்பிக்கை என்ன ஆனது என்பதே “வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. கதை 1960 காலகட்டங்களில் நடக்கிறது. ஊரின் கண்ணாத்தா என்னும் காவல் தெய்வத்திற்கு ஒரு பின்கதை வைத்து, அதை மக்கள் தெய்வமாக நம்புவதற்கு சில நிகழ்வுகளை நேரிடை சாட்சியாக நிகழ்த்திக் காட்டி, அதே நிகழ்வுகளின் மூலம் நாயகனான வடக்குப்பட்டி ராமசாமி, அந்த நம்பிக்கைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவெடுத்து எதிர்திசையில் நகரும் கதாபாத்திர முரண்களை ஆரம்பத்திலேயே அருமையாக கட்டமைக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. மக்களின் மூடநம்பிக்கைகளையும், நேர்த்திக்கடன் ...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆ...
‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

சினிமா, திரைத் துளி
லைக்கா புரொடக்ஷன்ஸ்  சார்பில் தயாரிப்பாளர்  சுபாஷ்கரன்  தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி  நட்சத்திர  நடிகருமான  ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக  நடித்திருக்கும்  'சந்திரமுகி 2'  படத்தில்  இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி...'  எனத்  தொடங்கும்  முதல்  பாடல்  இன்று வெளியானதோடு பாடல் வரிகளுடன் கூடிய  வீடியோவாகவும்  வெளியாகி  இருக்கிறது. இயக்குநர்  பி. வாசு  இயக்கத்தில்  65 ஆவது  படமாக  தயாராகி  வரும் திரைப்படம்  'சந்திரமுகி 2' . இதில்  ராகவா  லாரன்ஸ்,  பாலிவுட்  நடிகை கங்கணா ரனாவத்,  'வைகைப்புயல்'  வடிவேலு,  மகிமா நம்பியார்,  லஷ்மி மேனன்,  சிருஷ்டி  டாங்கே,  ராவ் ரமேஷ்,  விக்னேஷ்,  ரவி மரியா,  சுரேஷ் மேனன்,  சுபிக்ஷா கிருஷ்ணன்  உள்ளிட்ட  பலர்  நடித்திருக்கிறார்கள்  ஆர். டி. ராஜசேகர்  ஒளிப்பதிவு  செய்திருக்கும்  இந்த  திரைப்படத்திற்கு  ஆஸ்கார் விருதினை  வென்ற  இசையமைப்பாளர்  எம். எம்....
ஜெயில் விமர்சனம்

ஜெயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் 25 சிறந்த படங்களைத் தேர்வு செய்தால் அதில் வசந்தபாலனின் படம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அப்படியொரு படைப்பாளி வசந்தபாலன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஜெயில் மீது எல்லாருக்கும் இயல்பாய் ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தனது இப்படம் ‘நில உரிமை’யைப் பற்றிப் பேசுகிறது என மிகவும் அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இருந்தார். ஆனால் படம் அதை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே! வடசென்னை காவேரி நகரில் திருட்டு வேலைகள் செய்கிறார் நாயகன் ஜீவி. அவரது நண்பர் ராமு போதைப்பொருள் விற்கிறார். இவ்விருவர்களின் எந்தச் செயல்களையும் ரசிக்காத எதிர் அணி ஒன்று இவர்களிடம் உரசிக் கொண்டே இருக்கிறது. இரு டீமையும் தனக்குள் வைத்து தன் பாக்கெட்டையும் வேலையையும் காப்பாற்றிக் கொள்கிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியா. ஒரு கட்டத்தில் ராமுவைக் கொலை செய்க...
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும். முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அத...
சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து ஆண்களும், நான்கு பெண்களுமாக நண்பர்கள் குழு ஒன்று, மலைத்தொடரின் நடுவில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதொரு பெரிய வீட்டில், விக்கியின் பிறந்தநாளைக் கொண்டாடச் செல்கிறது. அக்குழுவை அமானுஷ்ய சக்தி ஒன்று தாக்குகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி உயிருடன் வீடு திரும்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மகிழ்ச்சியாகத் தொடங்கிய நண்பர்களின் பயணம் எப்படிக் கலவரமாகிறது என்பதும், அக்கலவரத்தால் விளையும் நன்மைகள் என்னவென்பதும் தான் படத்தின் கதை. படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத், இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதற்காக பெங்களூருவில் 'பெஸ்ட் யூத்' விருது பெற்றவர். மேலும், அவர் ஒரு யோகா பயிற்றுநரும் கூட! இந்த இரண்டு விஷயத்தையும் படத்தின் திரைக்கதையில் உணரலாம். ஒரு பேய்க்கதையில் தன்னை ஒரு நாயகனாகப் பொருத்திப் பார்த்து திரைக்கதை அமைத்துள்ளார். ஆம், படத்தின் பிரதான கதாபாத்திரமான ...
ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ட...
இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி - கருப்பு இணையின் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஜல்லிக்கட்டின் மேன்மையைப் பற்றிப் பேசும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு விளையாட்டல்ல, அது வீரம்; தமிழர்கள் தன் மானத்தை மாடுகளின் மீது இறக்கி வைத்தனர்; மாடு அணைபவனுக்கே பெண் என வசனங்கள் உள்ளன. மேலும், ஜல்லிக்கட்டின் வகைகளை...