Shadow

Tag: விஜய் ஆண்டனி

ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் வி...
மழை பிடிக்காத மனிதன் – சரத்குமார்

மழை பிடிக்காத மனிதன் – சரத்குமார்

சினிமா, திரைத் துளி
சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி நடிகர் சரத்குமார், “விஜய் மில்டனின் முந்தைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெவ்வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். இருப்பினும், அவர் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது என்பதை ...
மழை பிடிக்காத மனிதன் – கவித்துவமான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்

மழை பிடிக்காத மனிதன் – கவித்துவமான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கோலி சோடா 2' போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன்' (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், 'திருமலை' படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான முக்கியத்துவமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு பெரும் ...
ரோமியோ விமர்சனம்

ரோமியோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து 'கரெக்ட்' செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித்த...
“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இருவரும் 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் தலைவாசல் விஜய், "இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தைத் தனது மனவலிமையால்...
கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட...
“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. நடிகர் விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கேரியரில் ஒருமுறையாவது இது போன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பைக் ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒ...
“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

இது புதிது
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனிதான். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவத...
கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

சினிமா, திரைச் செய்தி
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K. குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொலை’ ஆகும். “லைலாவைக் கொன்றது யார்?” எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங் ஆகி வருகிறது. ‘கொலை’ படத்தில் இடம் பெறும் சம்பவம் குறித்து பரவும் இந்தச் செய்தி திரைப்பட ஆர்வம் இல்லாப் பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. வித்தியாசமான இந்த மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் பேசிய தனஞ்செயன், “இந்தப் படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார்தான். இயக்குநர் பாலாஜி மிகவும் திறமையான நபர். அவருக்கு பல ந...
கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

சினிமா, திரைத் துளி
கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர் நடித்த காட்சிகளுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் நகுல். தமிழ்த் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர் நகுல். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி, தமிழ் மக்களின் இல்லத்துப் பிள்ளையாக மாறியுள்ளார். இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த "மழை பிடிக்காத மனிதன்" படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துத் திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். படக்குழுவினர், தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுலையும், பிருத்வி...
“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

திரைச் செய்தி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம் எனும்போது, ஒரு வெப் சீரிஸை இயக்குவது என்பது மிகப் பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். அவர் பணிபுரிவதை வள்ளி மயில் எனும் எனது பட...
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’

சினிமா, திரைத் துளி
விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்தியல் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படப்பிடிப்பைப் படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது. முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். >> இசை - கண்ணன் >>...
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கை கோர்க்கின்றன. ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி கே. குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘இறைவி’, ‘இறுதி சுற்று’, ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘விடியும் முன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெரினா’ மற்றும் ‘நெற்றிக்கண்’ புகழ் கிரிஷ்...
கொலைகாரன் விமர்சனம்

கொலைகாரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் இணைந்திருக்கும் முதற்படம் என்பது எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. ஒரு கொலை ஒன்று நடக்கிறது. ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்று காவல்துறையில் சரணடைகிறார். அவர் தான் அந்தக் கொலையைப் பண்ணினாரா, ஏன் சரணடைந்தார் என்ற காவல்துறையின் விசாரணைதான் படத்தின் கதை. புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயனாக அர்ஜுன் நடித்துள்ளார். தான் தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், வழக்கில் ஏதோ இடறுவதாக அதை நூல் பிடித்து முடிக்க நினைக்கும் அவரது தீவிரம் ரசிக்க வைக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சமய சந்தர்ப்பங்களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவதா ...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர். படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல்...