Shadow

Tag: விஷ்ணு விஷால்

“சினிமா: சமூகத்தில் பாதிப்பைத் தரும்” – விஷ்ணு விஷால் | ஹாட் ஸ்பாட் 2

“சினிமா: சமூகத்தில் பாதிப்பைத் தரும்” – விஷ்ணு விஷால் | ஹாட் ஸ்பாட் 2

சினிமா, திரைச் செய்தி
  மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், அப்படத்தின் இரண்டாம்.பாகத்தை வழங்குகிறார். கேஜேபி டாக்கீஸ் & செவன் வாரியர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை கிரியேட்டிவ் ப்ரொடக்‌ஷன் மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கும், KJB டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பனும், செவன் வாரியர்ஸ் சுரேஷ் குமாரும் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்வினில் 'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது. செவன் வாரியர்ஸ் சுரேஷ் குமார், "மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம் உருவாகக் காரணம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோவிற்...
லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர...
காஸ்மோரா இயக்குநருடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்

காஸ்மோரா இயக்குநருடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக ...
கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பிரத்தியேக வகை மல்யுத்தமாகும். அக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கீர்த்திக்கு, மல்யுத்த வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவிடம், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதை மறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா கணேசன். கீர்த்தி பற்றிய உண்மை தெரிந்ததும் ஏற்படும் குழப்பமும் தெளிவும்தான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. கணவன் குறித்து நாயகியிடம் பெண்கள் கூறம் போதும், மனைவி குறித்து நாயகனிடம் கருணாஸ் கூறும் போதும், திரையரங்கில் சிரிப்பொலியைக் கேட்க முடிகிறது. இயக்குநர் செல்லா அய்யாவிற்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. வசனத்தில் வரும் 'சின்னம்மா'வைக் கருணாஸைக் கலாய்த்திருப்பது ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில், சினிமா சுதந்திரத்தைக் கையிலெடுத்து, ஈகோவ...
மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. 'மோகன்தாஸ்' படத்தைக் 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்...
விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்

சினிமா, திரைத் துளி
அடங்கமறு வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் மூலம் தயாரிப்பில் தடம் பதிக்கிறார். நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குநர், நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ஜீவா, நீர்ப்பறவை, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ராட்சசன் உள்ளிட...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் க...
ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

சினிமா, திரைச் செய்தி
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது."இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குந்ர் என்பதைக் கேள்விப்பட்ட உடனே அதை ஓகே செய்தார் டில்லி பாபு சார். பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது தான் இப்போதைய மிகப்பெரிய சவால். அதிர்ஷ்டவசமாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் கையில் படம் போய் சேர்ந்தது எங்கள் பாக்கியம். சின்ன கம்பெனி என்பதையும் தாண்டி எங்களை ந...
ராட்சசன் விமர்சனம்

ராட்சசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்ச...
கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்...
மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

சினிமா, திரைச் செய்தி
விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் முதல் படம் கதாநாயகன் ஆகும். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது. இது அவரைக் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு ஃபேம...
மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

சினிமா, திரைத் துளி
'முண்டாசுப்பட்டி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் 'மின்மினி' படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது. 'மின்மினி' படத்தின் தயாரிப்பில் 'ஸ்கைலார்க் மீடியா' ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. மின்மினியின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. படத்தின் கதைக்கரு, மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாம். மின்மினி தலைப்பைப் படத்தின் கதையோடு ஒரு வகையில் பொருத்...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை கொள்கிறேன்' என சுசீந்திரன் கூறியுள்ளார். அது உண்மை தான். கபாலியில் ரஞ்சித் சாதிக்காததை இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமென மெட்ராஸ் படத்தில் சொல்லியிருப்பார் ரஞ்சித். அதை அலட்சியத்தோடு, 'யார் படிக்க வேண்டாம்?' எனக் கேட்ட எகத்தாள பேர்வழிகளுக்கு, அக்கேள்வியின் அபத்தத்தை 'மாவீரன் கிட்டு' எனும் அழுத்தமான அரசியல் படம் புரிய வைக்கும். அரசியல் படம் மட்டுமன்று சாதீயத்தைப் பேசும் சாதிப்படமும்! அப்படி வரையறுப்பதும் கூடப் பிசகாகிவிடும். இது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் சமூகப்படம். கீழக்குடி மக்கள் இறந்தால் அவர்களின் பிணம் உயர்குடி மக்களின் தெரு வழியே கொண்டு செல்லக்கூடாதென தடை உள்ள புதூர் கிராமம் அது. நீதிமன்றம் வரை சென்று பிணத்தைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கியும் ஆதிக்கச் சாதியினரை மீறி...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய...