
Chennai Files முதல் பக்கம் விமர்சனம்
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் எனப் பொருள்படும்.
க்ரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பத்திரிகையில் தொடராக எழுத முடிவு செய்யப்படுகிறது. அதற்கு உதவுவதற்காக எழுத்தாளரின் மகனான பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். சூளைமேட்டு காவல் நிலைய ஆய்வாளரான ராமையாவிற்கு வழக்குகளில் உதவுகிறார். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க உதவுகிறார் வெற்றி.
சிங்கப்பூர் ஆணழகன் பட்டத்தை வென்ற மகேஸ்வரன் தேவதாஸ், இப்படத்தை இயக்கி வில்லனாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற குறை எழுந்தாலும், வில்லனுக்கான கம்பீரமான உடற்தோற்றத்தால் சமாளித்துவிடுகிறார். பிரபாகரன் பாத்திரத்தில் நடித்த வெற்றி நாயகனாக இருந்தாலும், ஆய்வாளர் வேடத்தில் நடித்துள்ள தம்பி ராமையா படத்தை நகர்த்திச் செல்பவராக உ...















