ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள்
ஒன்று. தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தையே 13 நிமிட குறும்படமாக காட்டிய அந்த முயற்சி, பலனளித்திருக்கிறது. அந்த பதிமூன்று நிமிடக் காட்சியின் ஒவ்வொரு நொடியும் படம் தொடர்பான சுவாரஸ்யத்தைக் கூட்டுவதோடு, மெய்யாகவே நம்மை இருக்கை நுனிக்கு தள்ளுகின்றன.
இரண்டு. த்ரிஷ்யம் திரைப்படத்திற்குப் பிறகு, இப்படத்தின் முடிவு தான் எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது என்கின்ற தணிக்கை துறையினரின் பாராட்டு.
மூன்று. படத்தைப் பார்த்த மறுகணமே, தான் முன் வைக்கும் யோசனைகளைப் பரிசீலிப்பதாக இருந்தால் படத்தினை நல்ல விலைக்கு வாங்கி நானே வெளியிடுகிறேன் என்று முன்வந்த தனஞ்ஜெயன் சார்,. அவருக்கு படத்தின் மீதிருக்கும் நம்பிக்கை, இப்படம் மீதான நம் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.
”ஒரு நொடி” முடிவு காண சில மணி காத்திருப்போம்....