Shadow

Tag: ஷேக்

RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்

RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் RED FLOWER, ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி RED FLOWER படத்தின் புதிய பரபரப்பான லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் விக்னேஷது கதாபாத்திர வடிவமைப்பும், அவரது தோற்றமும் நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும். அவரது மறுபிரவேசதிற்கு கட்டியம் கூறும்விதமாக இப்படம் அமையும். அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்வண்ணம் போஸ்டர் அமைந்துள்ளது. ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது. காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன...
ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..

ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..

சமூகம்
ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் ப்ராவோலியன் எவென்ட்ஸ் (PRAAWOLION EVENTZ) சென்னையில் சமூக நல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ "PRAWLION FASHION WEEK" ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நடிகர் பிரபாகரன் PC, “ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது” என்றார். ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் ...
ஸ்பாட் விமர்சனம்

ஸ்பாட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஸ்பாட் என்றால் ஓரிடம் அல்லது ஒருவரின் லோக்கேஷனைக் கண்டுபிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்திற்கு, இரண்டு பொருளுமே பொருந்தும். முதற்பாதியில், நாயகியின் லோக்கேஷனை வில்லனின் ஆட்கள் அவரது ஃபோனை வைத்துக் கண்டுபிடித்த (spot) வண்ணம் உள்ளனர். இரண்டாம் பாதியில், நாயகன் ஓரிடத்திற்கு (spot) வில்லன்களை மொத்தமாக வர வைக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை முழுவதுமே சேஸிங் (chasing) தான். மஹிந்திரா ஸ்கார்பியோவை, மிட்சுபிஷி பஜேரோ துரத்திக் கொண்டே உள்ளது. ஸ்கோர்பியாவில் நாயகன், நாயகி, நாயகனது மூன்று நண்பர்கள் உள்ளனர். சென்னையில் தொடங்கும் அந்த சேஸிங் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள கன்டெயினர் யார்டில் முடிகிறது. லொள்ளு சபா மனோகரின் மகன் ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். நாயகனின் நண்பர்கள் மூவரில் ஒருவராக வருகிறார். கலகலப்பிற்கு உதவக்கூடிய ஸ்கோப் இருந்தும் அதற்கான மெனக்கெடல் இல்ல...
கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூத்து என்பது வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரைக் கூத்தன் என்றழைப்பார்கள். கலைகளின் தோற்றுவாய் எனக் கருதப்படும் சிவனுக்கும் அப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நடிப்பிலும் நடனத்திலும் பேராவலுள்ள நாயகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயகன் வசிக்கும் ஃப்லிம் நகரில், சினிமா கனவுகளோடு 35 குடும்பங்கள் வாழ்கின்றன. அதன் உரிமையாளர் அந்த நகரை விற்க முற்படுவதால், ஃப்லிம் நகர்வாசிகள் அவ்விடத்தை வாங்க முயற்சி செய்கின்றனர். நாயகிகளின் நாட்டியப் பள்ளி வளாகம் கடனில் மூழ்கியுள்ளது. அதை மீட்கப் போராடுகின்றனர். இவர்கள் எப்படி இந்தக் கஷ்ட சூழலைச் சமாளித்து தங்கள் சிக்கல்களைத் தீர்க்கின்றனரே என்பதே படத்தின் கதை. நடனத்தை மையப்படுத்திய படம். அதனாலேயே, பிரபுதேவவின் தம்பி நாகேந்திர பிரசாத்தை வில்லனாகப் போட்டுள்...
கூத்தன் – இசை வெளியீட்டு விழா

கூத்தன் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் "கூத்தன்". இப்படத்தில், அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனல், கிரா, ஆகியோர் நடித்தள்ளனர். இவர்களுடன், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா,கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலகப்பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது. தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, "உலகில் முதலில் வந்தது கூத்துதான். கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில்நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ்இந்தப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிக...
புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்

புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்

சினிமா, திரைச் செய்தி
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் "கூத்தன்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது. விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், "ஒரு மிகப்பெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைப் பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப் படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் ...